தனது கிராமத்திற்காக அடையாளத்தை தேடி ஓடும் நாயகன்… ஓடிடியில் வெளியாகி உள்ள ராம் சரணின் பெத்தி படம் எப்படி இருக்கு? – விமர்சனம் இதோ
Ram Charans Peddi movie ott reivew here | நடிகர் ராம் சரண் நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் பெத்தி. இந்தப் படம் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ள நிலையில் படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருகிறார் நடிகர் ராம் சரண். இவரது நடிப்பில் தெலுங்கு சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் தெலுங்கு சினிமாவில் நடிகர் ராம் சரண் நடிப்பில் இருதியாக திரையரங்குகளில் வெளியான படம் பெத்தி. ஸ்போர்ட்ஸ் ட்ராமா பாணியில் வெளியான இந்தப் படத்தில் நடிகர் ராம் சரண் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்தினை இயக்குநர் புஜ்ஜி பாபு சணா எழுதி இயக்கி உள்ளார். படம் திரையரங்குகளில் வெளியான போது சுமார் 400 கோடிகளுக்கு அதிகமாக வசூலித்து சாதனைப் படைத்தது. மேலும் தென்னிந்திய சினிமாவில் இதுவரை வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படம் இது என்று சினிமா வட்டாரங்களில் வைரலாகி வருகின்றது.
இந்த நிலையில் இந்தப் படம் திரையரங்குகளில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற பெத்தி படம் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ளது. அதன்படி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி உள்ள இந்த பெத்தி படத்தினைப் பார்த்த ரசிகர்கள் தொடர்ந்து தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்தப் படம் எப்படி இருக்கிறது என்று தற்போது பார்க்கலாம்.
ஓடிடியில் வெளியாகி உள்ள பெத்தி படத்தின் கதை என்ன?
இந்தியாவின் மேப்பிலே இல்லாத மலை கிராமத்தை சேர்ந்தவர் நாயகன் பெத்தி (ராம் சரண்). இவர் கிரிக்கெட்டில் மிகவும் சிறப்பான விளையாட்டு வீரராக வருகிறார். அதன்படி அவர் கூலி வேலை செய்யும் ஊரில் உள்ள மேல் ஜாதிகாரர்கள் அவரை ஏலத்தில் எடுத்து விளையாட வைக்கிறார்கள். பெத்தி விளையாடும் அணி நிச்சயமாக வெற்றியைப் பெறும். இப்படி இருக்கும் சூழலில் பெத்தி ஒரு கட்டத்தில் தனக்கும் தனது கிராமத்திற்கும் ஒரு அடையாளம் இல்லை என்பதை உணர்ந்து அந்த அடையாளத்திற்காக போராடி வருகின்றார்.




Also Read… Mysskin: ட்ரெயின் படத்தை கமல் சார், அமீர் கான் சார் கூட பண்ண முடியாது – மிஷ்கின் பேச்சு!
அப்படி அவர் போராடுவது விளையாட்டை மையமாக வைத்து என்பது குறிப்பிடத்தக்கது. விளையாட்டில் தனது திறமையை ஒட்டுமொத்த நாட்டிற்கும் தெரியபடுத்தி அதன் மூலம் தனது கிராமத்திற்கு அடையாளத்தை பெற்றுத்தருகிறார் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.
Also Read… R Madhavan: எனது மகனுக்கு அந்த 2 வாழ்க்கை பாடத்தை கூறியிருக்கிறேன் – ஆர்.மாதவன் பேச்சு!