AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Atharvaa: அரசியலை 100 சதவீதம் பின்பற்றுவேன்.. ஆனால் – அதர்வா சொன்ன விஷயம்!

Atharvaa Political Views: தமிழில் இளம் நடிகராக இருந்து, ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டுவருபவர் அதர்வா. இவரின் நடிப்பில் இதயம் முரளி என்ற படமானது வெளியாகி வரவேற்பை பெற்றுவருகிறது.. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், அரசியலை பின்பற்றுவது குறித்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியது பற்றி விவரமாக காணலாம்.

Atharvaa: அரசியலை 100 சதவீதம் பின்பற்றுவேன்.. ஆனால் – அதர்வா சொன்ன விஷயம்!
அதர்வா Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 12 Jul 2026 12:09 PM IST

நடிகர் அதர்வா (Atharvaa) தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் தொடர்ந்து பல படங்கள் வெளியாகிவருகிறது. இறுதியாக இவரின் நடிப்பில் பராசக்தி (Parasakthi) என்ற படம் வெளியானது. இயக்குநர் சுதா கொங்கரா (Sudha Kongara) இயக்க, இதில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருந்தார். உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இயக்கப்பட்ட இப்படத்தில், அதர்வா முக்கியமான வேடத்தில் நடித்து வரவேற்கப்பட்டார். இந்த படத்திற்கு பிறகு அதர்வாவின் நடிப்பில் வெளியாக தயாராகியிருக்கும் படம்தான் இதயம் முரளி (Idhayam Murali). இதை பராசக்தி படத்தின் தயாரிப்பாளர் இயக்கி, தயாரித்திருக்கும் நிலையில், வரும் 2026ம் ஆண்டு ஜூலை 10ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது.

அந்த விதத்தில் இப்படத்தின் புரோமோஷன் பணிகளும் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய அதர்வா, அரசியலை பின்பற்றுவது குறித்து, அதில் ஆர்வம் இருக்கிறதா என்பது குறித்தும் பேசியுள்ளார். அதில் அவர் பேசியது பற்றி தெளிவாக காணலாம்.

இதையும் படிங்க: சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் தம்பி!

அரசியலை பின்பற்றுவது குறித்து வெளிப்படையாக பேசிய நடிகர் அதர்வா:

அந்த பேட்டியில் அதர்வாவிடம், முதல்வர் விஜய்யின் புகைப்படத்தை காண்பித்து தொகுப்பாளர் கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த அவர், “நானும் விஜய் சாரும் இருக்கும் இந்த போட்டோ எனது தம்பியின் நிச்சயதார்த்தத்தில் எடுத்த புகைப்படம். அவர் அங்கு வரும்போதே ஒரு ஆரா இருந்தது. தற்போது அவர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர். ஒவ்வொரு நடிகரின் உச்ச நிலை இதுதான் இருக்கும், இதை கண்டிப்பாக அடையவேண்டும் என்ற எண்ணத்தை மேலும் உயர்த்தியவர் அவர்தான் (விஜய்).

இதையும் படிங்க: ஜன நாயகன் பட ரிலீஸ் இந்த மாதத்தில் இருக்கும் – அப்டேட் கொடுத்த பிரியாமணி!

நடிகர்களுக்கு மட்டுமல்ல, எல்லா நபர்களுக்கும் அவர் ஒரு உத்வேகமாக ஆகிவிட்டார். எனக்கு அரசியலில் ஆர்வம் என்பது கிடையாது. ஆனால் அரசியலில் என்ன நடக்கிறது என்பதை நான் பின்பற்றுவேன். இப்போதுள்ள பலரும் சட்டசபையையே பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். நான் எப்போதுமே 100 சதவீதம் அரசியலை பின்பென்றுவே, இன்றுமட்டுமல்ல எப்போதுமே” என அதில் அவர் வெளிப்படையாக பேசியிருந்தார்.

இதயம் முரளி திரைப்படம் குறித்து அதர்வா வெளியிட்ட எக்ஸ் பதிவு:

அதர்வா நடித்திருக்கும் இதயம் முரளி படமானது வரும் 2026ம் ஆண்டு ஜூலை 10ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் ப்ரீத்தி முகுந்தன் மற்றும் கயாடு லோஹர் போன்ற பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். காதல் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம், திரையரங்குகளில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது.

Follow Us