Renigunta 2: சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் தம்பி!
Adhik Ravichandran Brother: தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குநர்கள் மத்தியில் ஒருவராக இருப்பவர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர் இறுதியாக அஜித் குமாரின் குட் பேட் அக்லி என்ற படத்தை இயக்கி ஹிட் கொடுத்திருந்தார். அந்த வகையில் இவரின் சகோதரன் மனு ரவிச்சந்திரன் தற்போது சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளாராம்.
கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் ஆதிக் ரவிச்சந்திரன் (Adhik Ravichandran). இவர் தமிழில் பல படங்களை இயக்கியுள்ளார். இவர் இறுதியாக அஜித் குமாரின் (Ajith Kumar) நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி (Good Bad Ugly) என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படமானது கடந்த 2025ம் ஆண்டில் வெளியாகியிருந்தது. இதில் அஜித் மற்றும் திரிஷா இணைந்து நடித்திருந்த நிலையில், மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றது. இதன் வெற்றியை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் மீண்டும் அஜித் குமாருடன் அவரின் 64வது படத்தில் இணைகிறார். இப்படத்தை அஜித் தனது சொந்த தயாரிப்பில் உருவாக்குவதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் தற்போது அப்படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகளில் இருக்கிறார்.
இவர் இயக்குநராக மக்கள் மத்தியில் பிரபலமானவர் என்ற நிலையில், இவரின் உடன் பிறந்த சகோதரர் மனு ரவிச்சந்திரன் (Manu Ravichandran) என்பவர் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். அந்த திரைப்படம்தான் ரேனிகுண்டா 2 (Renigunta 2). தனது சகோதரனுக்கு ஆதரவு அளிக்கும்படி இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவை வெளியிட்டுள்ளார்.




இதையும் படிங்க: அல்லு அர்ஜுன் சார் ஒரு சிறந்த இசை ரசனையாளர் – சாய் அபயங்கர்
தனது தம்பி இசையமைப்பாளராக அறிமுகமாவது குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட எக்ஸ் பதிவு:
Such a beautiful & different feeling all together. My brother #ManuRavichandran @manuravi_7 is making his debut as a Music Director in #Renigunta2 & the Teaser is here , please give him your love & support ❤️🙏🏻 Thank you @gvprakash sir @Directorpanneer sir , Deva sir… pic.twitter.com/pGqzN8d2KN
— Adhik Ravichandran (@Adhikravi) July 4, 2026
இந்த பதிவில் ஆதிக் ரவிச்சந்திரன், “மொத்தத்தில் இது ஒரு அழகான மற்றும் வித்தியாசமான உணர்வு. என் தம்பி மனு ரவிச்சந்திரன் ரேனிகுண்டா 2 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். அதன் டீசர் வெளியாகியிருக்கிறது. அவருக்கு உங்களின் அன்பையும் ஆதரவையும் கொடுங்கள். மேலும் ஜி.வி.பிரகாஷ் சார்-க்கு நன்றி மாற்றட்டும் ரேனிகுண்டா 2 படக்குழுவினருக்கு நன்றி” தெரிவித்துள்ளார்.
ரேனிகுண்டா 2 திரைப்படம்:
இயக்குநர் பன்னீர் செல்வம் இயக்கத்தில் உருவாக்கப்பட்டுவரும் புது படம்தான் ரேனிகுண்டா 2. இப்படமானது கடந்த 2009ம் ஆண்டில் வெளியான ரேனிகுண்டா 1 பட தொடர்ச்சியான கதையில் உருவாகிவருவதாக கூறப்படுகிறது. இப்படத்தில் ஷாலி நிவேகஸ் மற்றும் அபிமன்யூ போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்துவருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், இன்று (04/07/3036) இதன் டீசர் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: ரஜினிகாந்த் சார் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்குவது மிகப்பெரிய பொறுப்பாகும் – இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து
இந்த டீசரில் அதிரடி ஆக்ஷன் மற்றும் விறுவிறுப்பான கதைக்களம் இப்படத்தின் இருப்பதாக தெரிகிறது. இப்படத்திற்கு இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் சகோதரர் மனு ரவிச்சந்திரன் இசையமைத்துள்ள நிலையில், பின்னணி மற்றும் பாடல்களும் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் 2026ம் ஆண்டின் இறுதிக்குள் வெளியாகும் என கூறப்படுகிறது.