Time To Lead.. முதல்வர் விஜயை சந்தித்து மறக்கமுடியாத பரிசை வழங்கிய இயக்குநர் ஏ.எல்.விஜய்!
Director AL Vijay Meets CM Vijay: தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபலமான இயக்குநராக இருந்துவந்தவர் ஏ.எல்.விஜய். இவர் தற்போது அஜித் குமாரின் ரேஸிங் ஆவணப்படத்தை இயக்கியுள்ளார். இவர் இன்று (04/07/2026) தமிழக முதல்வர் விஜயை நேரில் சந்தித்துள்ளார். மேலும் அவருக்கு மறக்க முடியாத பரிசையும் வழங்கியுள்ளார்.
கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குநர்களின் வரிசையில் ஒருவராக இருந்துவபவர் ஏ.எல்.விஜய் (AL Vijay). இவரின் இயக்கத்தில் தமிழில் பல படங்கள் வெளியாகி ஹிட்டடித்திருக்கிறது. கடந்த 2007ம் ஆண்டில் வெளியான கிரீடம் (Kireedam) என்ற படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமான நிலையில், அதை தொடர்ந்து பல படங்களை இயக்கியிருக்கிறார். தனது முதல் படத்திலே அஜித்தை (Ajith) வைத்து இயக்கியிருந்த நிலையில், இவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்திருந்தது. பின் மதராசபட்டணம் (Madrasapattinam), தெய்வ திருமகள் (Deiva Thirumagal), தாண்டவம் உள்ளிட்ட பல படங்களை இயக்கி ஹிட் கொடுத்திருக்கிறார். இந்த வரிசையில், முன்னநாள் நடிகரும், தமிழக முதல்வருமான விஜயை (CM Vijay) வைத்து “தலைவா” (Thalaivaa) என்ற படத்தை இயக்கி ஹிட் கொடுத்திருந்தார்.
இந்த படமானது தளபதி விஜய்யின் வாழ்க்கையை புரட்டிப்போட்ட திரைப்படம் என கூறலாம். அந்த வகையில் இயக்குநர் ஏ.எல்.விஜய் இன்று, (04/07/2026) முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்துள்ளார். மேலும் அவருக்கு மறக்கமுயடியாத பரிசையும் கொடுத்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: ஜன நாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து இணையத்தில் வைரலாகும் தகவல்
தலைவா பட வாசகத்தை முதல்வர் விஜய்க்கு பரிசளித்த ஏ.எல்.விஜய்:
முதல்வர் விஜயை சந்தித்த இயக்குநர் ஏ.எல்.விஜய், அவருக்கு தலைவா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இடம்பெற்றிருந்த, “Time To Lead” என்ற வாசகத்தை பெரிய அளவிலான புகைப்படமாக பரிசளித்துள்ளார். தற்போது இந்த புகைப்படமானது அவரின் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது.
முதல்வர் விஜயை இயக்குநர் ஏ.எல்.விஜய் சந்தித்தது தொடர்பாக வைரலாகும் பதிவு:
Pic of the DAY ❤️
Time To Lead – Dir #ALVijay met with #CMJosephVijay 📸#JanaNayagan pic.twitter.com/ZVJVPgaWYB
— Movie Verse (@_MovieVerse) July 4, 2026
இயக்குநர் ஏ.எல்.விஜய்யின் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்திருந்த திரைப்படம்தான் தலைவா. இப்படத்தில் விஜய்யுடன் அமலா பால், சத்யராஜ் மற்றும் சந்தானம் போன்ற பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்திருந்தனர். கடந்த 2013ம் ஆண்டில் வெளியாகியிருந்த இந்த படமானது முதல்வர் விஜய்யின் அரசியல் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை என கூறலாம்.
இதையும் படிங்க: 40 வருஷத்துக்கு முன்னாடி டெய்லரா வந்தேன்… கருப்பு பட வெற்றிக் குறித்து எமோஷ்னலாக பேசிய நடிகர் இந்திரன்
இந்த படம் வெளியாகும் சமையத்தில் பல எதிர்ப்புகள் மற்றும் போராட்டங்களும் இருந்தது. அதையெல்லாம் மீறி இப்படம் வெளியாகியிருந்த நிலையில், மக்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தை அடுத்ததாகவே விஜய் தனது படங்களில் பல அரசியல் வசனங்களை வெளிப்படையாக பேச ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.