AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Samantha: ஃபன் ஃபன்.. சமந்தாவின் மா இன்டி பங்காரம் படத்தின் டெலீட்டட் வீடியோவை வெளியிட்ட படக்குழு!

Samanthas Maa Inti Bangaaram: தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நாயகியாக இருந்துவருபவர் சமந்தா ரூத் பிரபு. இவரின் நடிப்பில் 2026ம் ஆண்டில் வெளியாகி பிளாக்பாஸ்டர் ஹிட்டான படம்தான் மா இன்டி பங்காரம். இந்த படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சி மற்றும் வசூல் குறித்து படக்குழு பதிவை வெளியிட்டுள்ளது. இது தற்போது வைரலாகிவருகிறது.

Samantha: ஃபன் ஃபன்.. சமந்தாவின் மா இன்டி பங்காரம் படத்தின் டெலீட்டட் வீடியோவை வெளியிட்ட படக்குழு!
மா இன்டி பங்காரம் பட நீக்கப்பட்ட காட்சிகள்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 03 Jul 2026 20:52 PM IST

நடிகை சமந்தாவின் (Samantha) நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் மா இன்டி பங்காரம் (Maa Inti Bangaaram) (எங்கள் தங்கம்). இந்த படத்தை இயக்குநர் நந்தினி ரெட்டி (Nadhini Reddy) இயக்கி, சமந்தாவின் ட்ராலலா மூவிங் பிக்ச்சர்ஸ் நிறுவனமானது தயாரித்துள்ளது. நடிகை சமந்தா கடந்த 2023ம் ஆண்டில் வெளியான குஷி திரைப்படத்திற்கு பின் பெரிதாக எந்த படங்களிலும் நடிக்கவில்லை. சில உடல் நிலை பிரச்சனையின் காரணமாக படங்களில் அவர் நடிக்கவே இல்லை. அந்த வரிசையில் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு பின் இவரின் நடிப்பில், 2026ம் ஆண்டு ஜூன் 19ம் தேதில் வெளியான படம்தான் மா இன்டி பங்காரம். இந்த படமானது அதிரடி ஆக்ஷன் மற்றும் பேமிலி கதைக்களத்தில் வெளியாகியிருந்த நிலையில், திரையரங்குகளில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படமானது தமிழில் எங்கள் தங்கம் என்ற டைட்டிலில் வெளியாகிவந்த நிலையில், தமிழ் மக்களிடையேயும் வரவேற்கப்பட்டிருந்தது. அந்த வகையில் தற்போது இப்படத்திலிருந்து டெலீட்டட் காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது. மா இன்டி பங்காராம் படத்தின் ஷூட்டிங்கின்போது நடந்த நகைச்சுவையான காட்சிகள் மற்றும் படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகள் சிலவற்றை படக்குழு பகிர்ந்துள்ளது.

இதையும் படிங்க: பிகினி அணிவதில் என்ன தவறு? அதிரடியாக தனது கருத்தை முன்வைத்த மாளவிகா மோகனன்!

மா இன்டி பங்காரம் படத்தின் டெலீட்டட் காட்சிகள் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

மா இன்டி பங்காராம் படத்தின் மொத்த வசூல் என்ன:

சமந்தாவின் இப்படத்தில், அவருடன் நடிகர்கள் கௌதமி மற்றும் பல்வேறு தெலுங்கு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். இதில் சமந்தா குடும்ப பெண்ணாகவும், ஆக்ஷன் நாயகியாகவும் நடித்திருந்தார். இந்த படத்தை நந்தினி ரெட்டி இயக்க, சமந்தாவே தயாரித்திருந்தார்.

இதையும் படிங்க: ராகவா லாரன்ஸின் பென்ஸ் படத்தின் தற்போதைய நிலை என்ன? வைரலாகும் தகவல்

மேலும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள நிலையில், படத்தின் பாடல்களும் சிறப்பாக வரவேற்கப்பட்டிருந்தது. இப்படம் ஜூன் 19ல் வெளியான நிலையில், 20 மொத்தம் நாட்களை கடந்துள்ளது. அந்த வகையில் உலகமெங்கும் சுமார் ரூ 92 கோடிகளுக்கு மனில் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

மா இன்டி பங்காரம் பட உலகளாவிய வசூல் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:

இந்த படமானது தற்போதும் திரையரங்குகளில் வரவேற்கப்பட்டுவரும் நிலையில், விரைவில் ஓடிடியில் வெளியாக காத்திருக்கிறதாம். இதன் டிஜிட்டல் ரிலீஸ் உரிமையை ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் பெற்றுள்ள நிலையில், ஜூலை மாத இறுதி அல்லது ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us