AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Samantha: 3 ஆண்டுக்கு பின் சமந்தாவின் மாஸ் கம்பேக்.. 4 நாட்களிலே ரூ 50 கோடி வசூலித்த எங்கள் தங்கம் திரைப்படம்!

Engal Thangam Movie 4th Days collection: சமந்தாவின் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக ஆக்ஷன் கதையில் வெளியான படம்தான் எங்கள் தங்கம். இப்படமானது கடந்த 2026ம் ஆண்டு ஜூன் 19ம் தேதியில் உலகமெங்கும் வெளியான நிலையில், 4 நாட்களில் மொத்தம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.

Samantha: 3 ஆண்டுக்கு பின் சமந்தாவின் மாஸ் கம்பேக்.. 4 நாட்களிலே ரூ 50 கோடி வசூலித்த எங்கள் தங்கம் திரைப்படம்!
எங்கள் தங்கம் பட வசூல்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 23 Jun 2026 16:12 PM IST

கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்குமேல் எந்த படங்களும் திரையரங்குகளில் வெளியாகாமல், பெரிதாக படங்களில் எதுவும் நடிக்காமல் தற்போது மக்கள் மத்தியில் பிரபலமான நாயகியாக இருந்துவருபவர் சமந்தா ரூத் பிரபு (Samantha Ruth Prabhu). இவர் தமிழில் தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் சூர்யா (Suriya) உள்ளிட்ட பல்வேறு உச்ச நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் இறுதியாக விஜய் தேவரகொண்டாவுடன் குஷி என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படமானது கடந்த 2023ம் ஆண்டில் வெளியானது. இப்படத்திற்கு பின் சமந்தாவின் நடிப்பில் திரையரங்குகளில் ஹிட்டடித்த 3 ஆண்டுகளுக்கு பின் வெளியான படம்தான் எங்கள் தங்கம் (Engal Thangam) (மா இன்டி பங்காரம்). இப்படமானது தெலுங்கு மொழியை மையமாக கொண்ட படமாக திறக்கியிருந்த நிலையில், கடந்த 2026ம் ஆண்டு ஜூன் 19ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது.

அந்த வகையில் இன்று 2026ம் ஆண்டு ஜூன் 23ம் தேதியோடு நான்கு நாட்களை கடந்த நிலையில், உலகமெங்கும் சுமார் ரூ 50 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அந்த வகையில் இதை சமந்தாவின் ரசிகர்கள் பிரம்மாண்டமாக கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படிங்க: மா இண்டி பங்காரம் படத்தின் வெற்றி… சமந்தாவை நேரில் அழைத்து பாராட்டிய சிரஞ்சீவி!

சமந்தாவின் எங்கள் தங்கம் படத்தின் 4வது நாள் வசூல் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

எங்கள் தங்கம் பட வெற்றிபெற என்ன காரணம்:

சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் புகழ்பெற்ற நடிகைகளில் ஒருவராக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் தொடர்ந்து பல படங்கள் வெளியாகிவருகிறது. இவர் கடந்த 2023ம் ஆண்டில் குஷி என்ற படத்தில் இறுதியாக நடித்திருந்தார். இதையடுத்து தனது உடல்நிலை பிரச்சனையின் காரணமாக சினிமாவிலிருந்து விலகினார். இதையடுத்து எந்த படங்களிலும் இவர் நடிக்கவே இல்லை. ஆனால் தனது உத்வேகம் காரணமாக பல பிஸினஸ்களை தொடங்கினார். மேலும் இணையதளங்களில் ரசிகர்களுடன் எப்போதும் ஆக்டிவாக இருப்பது.

இதையும் படிங்க: ரியோவின் ராம் இன் லீலா படம்.. முதல் பாடல் ரிலீஸ் எப்போது தெரியுமா?

மேலும் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது போன்ற விஷயத்தில் இருந்துகொண்டே இருந்தார். அதனால் இந்த மூன்று ஆண்டு இடைவேளை ரசிகர்களுக்கு பெரிதாக தெரியவில்லை. அந்த வகையில் இவர் எப்போது படத்தில் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்துவந்த அதே சமையத்தில் இந்த எங்கள் தங்கம் படத்தை வெளியிட்டிருந்த நிலையில், இது அவருக்கு மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us