மா இண்டி பங்காரம் படத்தின் வெற்றி… சமந்தாவை நேரில் அழைத்து பாராட்டிய சிரஞ்சீவி!
Chiranjeevi personally invited and congratulated Samantha | நடிகை சமந்தா ரூத் பிரபுவின் நடிப்பில் வெளியான மா இண்டி பங்காரம் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக சிரஞ்சீவி சமந்தா மற்றும் படக்குழுவை நேரில் சந்தித்து வாழ்த்தியுள்ளார். இது தற்போது வைரலாகி வருகின்றது.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நடிகை சமந்தா ரூத் பிரபு. இவர் தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தாலும் அதிக் அளவில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கு மொழியில் தற்போது படங்களை தயாரிப்பது மற்றும் நடிப்பு என அதிகமாக கவனம் செலுத்தி வருகிறர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகை சமந்தா ரூத் பிரபு சில ஆண்டுகளாக சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகி இருந்தார். அவருக்கு சற்று உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவர் அந்த ப்ரேக் எடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது மீண்டும் சினிமாவில் நடிப்பதில் என்ட்ரி கொடுத்து உள்ள நடிகை சமந்தா ரூத் பிரபுவை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் நடிகை சமந்தா கம்பேக் கொடுத்தது சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான மா இண்டி பங்காரம் என்ற படத்தின் மூலமாகதான். இந்தப் படத்தில் கதையின் நாயகியாக நடிகை சமந்தா நடித்து உள்ளார். பல ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்தப் படத்தில் நடிகை சமந்தாவின் நடிப்பை ரசிகர்களும் பிரபலங்களும் தொடர்ந்து வாழ்த்தி வருகின்றனர். அந்த வரிசையில் மெஹா ஸ்டார் சிரஞ்சீவி சமந்தா மற்றும் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.




புடவையில் சமந்தாவின் ஆக்ஷன் வேற லெவல்:
அதன்படி சமந்தாவை பாராட்டி ஒரு பதிவை சிரஞ்சீவி வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் கூறியதாவது, மா இண்டி பங்காரம் மிகவும் சுவாரஸ்யமாக அமைந்திருந்தது. கூட்டுக்குடும்பப் பின்னணியில் ஆக்ஷன் மற்றும் உணர்ச்சிகளை அழகாக இணைத்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது தனித்துவமான பாணியில் இப்படத்தை உயிர்ப்புடன் உருவாக்கி, மிகவும் ரசிக்கும்படியாக மாற்றியுள்ளார். சமந்தாவின் நடிப்பு, குறிப்பாகப் புடவை அணிந்த நிலையில் அவர் நடித்த ஆக்ஷன் காட்சிகள் மிகவும் ஈர்க்கக்கூடியதாக இருந்தன.
பன்முகத்தன்மை கொண்ட மற்றும் பெண்களை மையமாகக் கொண்ட இது போன்ற திரைப்படங்கள் தெலுங்குத் திரையுலகிற்கு மிகவும் அவசியமானவை. இந்த வெற்றிக்குச் சமந்தா, நந்தினி ரெட்டி, ராஜ் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். அதேவேளையில், தங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கவிருக்கும் சமந்தா மற்றும் ராஜ் ஆகிய தம்பதியினருக்கும் சிறப்பான வாழ்த்துகள் என்றும் தெரிவித்து இருந்தார்.
Also Read… ஜிவி பிரகாஷின் இம்மார்டல் படத்திலிருந்து வெளியானது லவ்-யூ லவ்-யூ காட்டேரி பாடல்
மெகா ஸ்டார் சிரஞ்சீவி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
“మా ఇంటి బంగారం“ చాలా ఆసక్తికరంగా అనిపించింది. ఉమ్మడి కుటుంబ నేపథ్యంలో యాక్షన్, భావోద్వేగాలను అందంగా మేళవిస్తూ వినోదాత్మకంగా దర్శకురాలు నందిని రెడ్డి తనదైన శైలిలో తెరకెక్కించారు. @Samanthaprabhu2 నటన, ముఖ్యంగా చీరకట్టులో చేసిన యాక్షన్ సన్నివేశాలు ప్రత్యేక ఆకర్షణగా నిలిచాయి.… pic.twitter.com/eE5xemjh3c
— Chiranjeevi Konidela (@KChiruTweets) June 23, 2026
Also Read… ஆக்ஷன் கிங் அர்ஜுனின் ப்ளாஸ்ட் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி இதோ!