ரியோ ராஜ் நடிப்பில் மீண்டும் ஒரு ஃபன் என்டர்டெயின்மென்ட் படம்… வெளியானது ராம் இன் லீலா படத்தின் ட்ரெய்லர் – வைரலாகும் வீடியோ
Ram In Leela Movie Trailer Out Now | தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகனாக வலம் வருபவர் நடிகர் ரியோ ராஜ். இவரது நடிப்பில் தற்போது உருவாகி உள்ள ராம் இன் லீலா படத்தின் ட்ரெய்லரை தற்போது வெளியிட்டுள்ளனர்.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து வருபவர் நடிகர் ரியோ ராஜ். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தற்போதைய இளைஞர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியாவதால் ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் ஆண் பாவம் பொல்லாதது. இந்தப் படத்தில் விவாகரத்து கோரும் மனைவி கணவனை எந்த அளவிற்கு பிரச்சனையில் சிக்க வைப்பார் என்றும் சுதந்திரம் என்பதை தவறாக புரிந்துகொள்ளும் பெண்கள் திருமண வாழ்க்கையை எப்படி கையாழ்கிறார்கள் என்பதை மிகவும் எளிமையாக மக்களுக்கு புரியும் வகையில் எடுத்து இருந்தனர். இந்தப் படத்தில் நடிகர் ரியோ ராஜின் நடிப்பு ரசிகர்களிடையே அதிக அளவில் பாராட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் ரியோ ராஜ் மற்றும் ஒரு ப்ளாக் பஸ்டர் ஹிட் அடிக்க உள்ள படத்தில் நடித்து உள்ளார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதில் இருந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன் எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் நடிகர் ரியோ ராஜ் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.




வெளியானது ராம் இன் லீலா படத்தின் ட்ரெய்லர்:
ரியோ ராஜிற்கு ஜோடியாக நடிகை வர்த்திகா நடித்து உள்ள நிலையில் அவர்களுடன் இணைந்து நடிகர்கள் முனிஷ்காந்த், மாளவிகா அவினாஷ், தீபா வெங்கட், மகபா ஆனந்த், பாலாஜி தியாகராஜன் தயாளன், தாஃபியா அபு, கவின் ஜிடி, நயனா எல்சா, குஷிதா கலப்பு, சூப்பர் சுப்பராயன் மாஸ்டர், சுவாமிநாதன், காத்தாடி ராமமூர்த்தி, புஜ்ஜி பாபு, பிரியங்கா நாயர், சுதன், ராஜவேல், விக்கி, விக்கி, சிவன்குமார், விக்கி அதியமான் ஏ, கண்ணன் இ என பலர் நடித்து உள்ளனர். இந்த நிலையில் படம் வருகின்ற 21-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லரை தற்போது வெளியிட்டுள்ளனர். அது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… உலக நாயகன் கமல் ஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆன களத்தூர் கண்ணம்மா 66 ஆண்டுகளை நிறைவு செய்தது!
நடிகர் ரியோ ராஜ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Meet the madness, match the mood. 🔥#RamInLeela official trailer OUT NOW
▶️https://t.co/OfWPx8RGPD@rio_raj @tridentartsoffl @eywaent @sude_v @sanjayvijayragh @srikumaranfilms @ramachandr5017 @thinkmusicindia @apinternational @024vartika @i_nayan_aElza pic.twitter.com/wL0S9V1PZH
— Rio raj (@rio_raj) August 12, 2026