AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சேயோன் பட ஷூட்டிங்கிற்காக மதுரை சென்ற சிவகார்த்திகேயன் – வைரலாகும் போட்டோ

Actor Sivakarthikeyan Seyon Movie Update | தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் தற்போது சேயோன் படம் உருவாகி வருகின்றது. இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடர்பான அப்டேட்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.

சேயோன் பட ஷூட்டிங்கிற்காக மதுரை சென்ற சிவகார்த்திகேயன் – வைரலாகும் போட்டோ
சிவகார்த்திகேயன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 10 Aug 2026 13:08 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன் (Actor Sivakarthikeyan). இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆன ஆரம்ப காலக்கட்டத்தில் தொடர்ந்து காமெடியை மையமாக வைத்து உருவாகும் படத்தில் நடித்து வந்த நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது அதிக அளவில் கதைகளுக்கு முக்கியதுவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் சமீப காலமாக வெளியாகும் படங்கள் கதைக்கு முக்கியதுவம் கொடுக்கும் படமாக இருப்பது ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது. இறுதியாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பராசக்தி படமும் இந்தி எதிர்ப்பு கொள்கையை மையமாக வைத்து உருவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்தடுத்து 25 படங்கள் இதுவரை வெளியாகி உள்ள நிலையில் தற்போது 26-வது படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்தப் படத்தை இயக்குநர் சிவக்குமார் முருகேசன் எழுதி இயக்கி வருகிறார். இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

சேயோன் பட ஷூட்டிங்கிற்காக மதுரை சென்ற சிவகார்த்திகேயன்:

அந்த வகையில் தற்போது வெளியான தகவலின்படி, சேயோன் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக சிவகார்த்திகேயன் மதுரை சென்றுள்ளார். பிரம்மாண்டமான அரங்கில் இன்று படத்தின் விரிவான இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தொடங்குகிறது. இது ஒரு முழுமையான கிராமியப் பின்னணியிலான மாஸ் பொழுதுபோக்குத் திரைப்படமாக அமையும் என்று கூறப்படுகிறது. 2027 பொங்கல் பண்டிகையன்று இப்படத்தை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. சிவகுமார் முருகேசன், சிவகார்த்திகேயனை எத்தகைய ‘மாஸ்’ தோற்றத்தில் காட்டப்போகிறார் என்பதைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Also Read… 300 வருடம் வாழும் ஒரு வேம்பையர்.. இம்மார்டல் படத்தின் கதை இப்படிதான் இருக்கும் – ஜி.வி.பிரகாஷ் குமார் ஓபன் டாக்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… பிறர் துன்பம் தன் துன்பம் போல் எண்ணினான் வரலாற்றில் ஒரு தலைவன் உருவாகுவான் – 13 ஆண்டுகளைக் கடந்தது தளபதி விஜயின் தலைவா படம்!

Follow Us