AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Toxic: அப்பா மகனின் ரிவெஞ்ச்.. யாஷின் டாக்ஸிக் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது!

Toxic Movie Trailer: கன்னட சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக இருந்துவருபவர் யாஷ். இவரின் நடிப்பில் பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ளதுதான் டாக்ஸிக். இப்படம் விரைவில் வெளியாக தயாராகியுள்ள நிலையில், இதன் அதிரடி ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது இது இணையத்தில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது.

Toxic: அப்பா மகனின் ரிவெஞ்ச்.. யாஷின் டாக்ஸிக் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது!
டாக்ஸிக் திரைப்படத்தின் ட்ரெய்லர்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 08 Aug 2026 19:36 PM IST

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நாயகனாக இருந்துவருபவர் ராக்ஸ்டார் யாஷ் (Rockstar Yash). இவர் கன்னட சினிமாவில் அதிரடி நாயகனாக இருந்துவரும் நிலையில், இறுதியாக இவர் நடிப்பில் கேஜிஎப் 2 திரைப்படம் வெளியாகியிருந்தது. இப்படத்திற்கு பின் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக உருவாகிவந்த திரைப்படம்தான் டாக்ஸிக்: எ ஃபேரி டைல் ஃபார் கிரௌன் -அப்ஸ் (Toxic: A Fairy Tale for Grown-Ups). இந்த படத்தை பெண் இயக்குநர் கீது மோகன் தாஸ் (Geetu Mohandas)இயக்க, இதன் கதையாயி யாஷும் இணைந்து எழுதியுள்ளார். மேலும் ஜன நாயகன் பட தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன், யாஷின் மாஸ்டர் மைண்ட் கிரியேஷன் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. இதில் யாஷ் மொத்தம் 2 வேடங்களில் நடித்துள்ளாராம். மேலும் கேஜிஎப் மற்றும் சலார் போன்ற படங்களின் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இப்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். இந்த படம் அதிரடி கேங்ஸ்டர் மற்றும் ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் யாஷுடன், நயன்தாரா (Nayanthara), கியாரா அத்வானி (Kiara Advani), தாரா சுதாரியா, ருக்மிணி வசந்த் (Rukmini Vasanth) மற்றும் ஹுமா குரேஷி உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர நடிகர்கள் இணைந்துள்ளனர்.

இப்படம் வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதியில் பான் இந்திய மொழிகளில் வெளியாகிறது. அதை முன்னிட்டு இன்று (08/08/2026) இதன் ட்ரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லரை கன்னட நடிகர் சிவராஜ்குமார் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கோட் படத்தின் நடிகர்கள் தேர்வு இப்படிதான் இருந்தது – தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி

யாஷின் டாக்ஸிக் திரைப்படத்தின் ட்ரெய்லர் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:

அப்பா மற்றும் மகனின் ரிவெஞ்ச்.. டாக்ஸிக் ட்ரெய்லர் எப்படி இருக்கு:

இந்த டாக்ஸிக் படத்தில் யாஷ், ராயா மற்றும் டிக்கெட் என இரு வேடங்களில் நடித்துள்ளார். இதில் ரயாவின் காதல் மனைவியாக கியாரா அத்வானி நடித்துள்ளார். இப்படத்தில் ஒரு பவர் ஃபுல்லான ஒரு கேங்ஸ்டராக யாஷின் ரயா கதாபாத்திரம் உள்ளது. இந்த படத்தில் நயன்தாரா, ருக்மிணி வசந்த், ஹுமா குரேஷி போன்ற நடிகைகள் நெகடிவ் கலந்த வேடத்தில் நடித்திருப்பதாக தெரிகிறது.

இதையும் படிங்க: நிவின் பாலி – மமிதா பைஜூவின் ‘பெத்லஹேம் குடும்பா யூனிட்’ படத்தின் கதை இதுவா?

மேலும் நடிகை கியாரா அத்வானியின் கதாபாத்திரம் மிகவும் உறுதியாக தெரிகிறது. படம் முழுக்க ஆக்ஷ்ன், வன்முறை காட்சி மற்றும் அதிரடி விஷசுவலாக இருக்கிறது. தற்போது வெளியான இந்த ட்ரெய்லர் ஆக்ஷன் பட மற்றும் ஹாலிவுட் பட ரசிகர்கள் மத்தியில் பெரும் ஈர்ப்பை ஏற்படுத்திவருகிறது. கேஜிஎப் படத்திற்கு பின் இது யாஷுக்கு பான் இந்திய வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாக்ஸிக் படத்தை யாரெல்லாம் பார்க்கலாம்:

இந்த டாக்ஸிக் படமானது வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. அதனை முன்னிட்டு இன்று இப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இப்படம் முழுக்க அதிரடி ஆக்ஷன் மற்றும் சர்ச்சை காட்சிகள் அதிகம் இருப்பதால், ஏ தர சான்றிதழ் கிடைக்கும். அதனால் இதை 18 வயதிற்கு மேற்பட்டோர் மட்டுமே திரையரங்குகளில் சென்று பார்க்கமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us