AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Yash: பேய் படங்கள் என்றாலே பயம்.. நல்ல கதை இருந்தால் நிச்சயம் நடிப்பேன் – யாஷ்!

Yash About Horror Films: கன்னட சினிமாவின் மூலமாக உலகமெங்கும் பிரபலமானார் யாஷ். இவரின் நடிப்பில் டாக்ஸிக் என்ற படமானது வெளியாகி தயாராகியுள்ளது. அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய அவர், பேய் கதை திரைப்படங்களில் நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார். அது பற்றி விவரமாக பார்க்கலாம்.

Yash: பேய் படங்கள் என்றாலே பயம்.. நல்ல கதை இருந்தால் நிச்சயம் நடிப்பேன் – யாஷ்!
யாஷ்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 01 Aug 2026 17:33 PM IST

பான் இந்திய நாயகனாக மக்கள் மத்தியில் புகழப்பட்டுவருபவர் ராக்ஸ்டார் யாஷ் (Rockstar Yash). இவரின் நடிப்பில் கன்னட மொழியில் தொடர்ந்து படங்கள் உருவாக்கப்பட்டுவருகிறது. இவர் கேஜிஎப் (KGF) திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமான இவர், தற்போது இந்தி மொழியிலும் படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். இவரின் நடிப்பில் 2026ம் ஆண்டில் இரு படங்கள் வெளியாக காத்திருக்கிறது. பெண் இயக்குநர் கீது மோகன்தாஸ் (Geetu Mohandas) இயக்கத்தில் டாக்ஸிக் என்ற படத்தில் அதிரடி ஆக்ஷன் நாயகனாக நடித்துள்ளார். இந்த படமானது பான் இந்திய மொழிகளில் சிறப்பாக உருவாகியுள்ளது. மேலும் நிதேஷ் திவாரியின் (Nitesh Tiwari) இயக்கத்தில் ராமாயணா (Ramayana) என்ற படத்தில் ராவணா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

2026ம் ஆண்டில் ஆண்டில் இரு படங்கள் வெளியாகி காத்திருக்கும் நிலையில், தற்போது முழு வீச்சாக புரொமோஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய யாஷ், தனக்கு பேய் படங்களை பார்க்க பயம் என்றும், ஆனால் நல்ல கதையாக இருந்தாலே அதில் நடிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சூப்பர் ஸ்டார் கொடுத்த ஆன்மிக புத்தகம்.. நெகிழ்ச்சியாக வீடியோவை பகிர்ந்த நடிகை ராஷி கண்ணா!

பேய் படங்களில் நடிப்பது குறித்து நடிகர் யாஷ் பேசிய விஷயம்:

பேட்டி ஒன்றில் பேசிய யாஷ், “எனக்கு பேய் படங்களை தியேட்டரில் பார்க்க பிடிக்காது. தியேட்டருக்கு சென்று பயப்பட நான் விரும்புவதில்லை. பேய் படங்கள் பயத்தை விட சில நேரம் வேடிக்கையாக தோன்றும். வலுவான மற்றும் தனக்கு பிடித்தமான கதை இருந்தால் ஹாரர் படங்களில் நடிக்க தயார் என்றும், ஆனால் ஆக்ஷன் படங்களே தனக்கு ஆள்-டைம் ஃபேவரிட்” என்றும் அதில் அவர் ஓபனாக பேசியுள்ளார்.

ராமாயணா திரைப்படம் குறித்து  வெளியிட்ட எக்ஸ் பதிவு:

இயக்குநர் நிதேஷ் திவாரியின் இயக்கத்தில் யாஷ் நடித்துள்ள படம் ராமாயணா. இதில் ரன்பீர் கபூர் ராமனாகவும், சாய் பல்லவி சீதையாகவும் மற்றும் யாஷ் ராவணனாகவும் நடித்திருந்தனர். சில நாட்களுக்கு முன் இதன் ட்ரெய்லர் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

இதையும் படிங்க: உண்மையிலே ஒரு வரலாற்று தருணம்.. பொறுப்புகளும் அதிகமாக இருக்கு – முதல்வர் விஜய் குறித்து பேசிய ஜேசன் சஞ்சய்!

இப்படமானது 2 பாகங்களாக வெளியாகவுள்ள நிலையில், முதல் பாகத்தின் ஷூட்டிங் முடிம்பித்தது. மேலும் 2வது பாகத்தின் ஷூட்டிங்கிங் ராமாயணா 1 படத்தின் ரிலீஸிற்கு பின் தொடங்குமாம். ராமாயணா 1 படமானது வரும் 2026ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Follow Us