Yash: டாக்ஸிக் படத்தின் சர்ச்சைக்குரிய காட்சி – இயக்குநர் குறித்து பேசிய யாஷ்!
Yash About Toxic Controversial Scenes: பான் இந்திய திரைப்பட ரசிகர்களும் எதிர்பார்துவரும் திரைப்படம்தான் டாக்ஸிக். இப்படத்தில் கன்னட நடிகர் யாஷ் நாயகனாக நடித்திருக்கும் நிலையில், பிரம்மாண்டமாக தயாராகியுள்ளது. அந்த வகையில் இப்படத்தின் அறிவிப்பு கிளிம்ப்ஸில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றிருந்த நிலையில், அது குறித்து யாஷ் விளக்கம் கொடுத்துள்ளார்.
கன்னட சினிமாவில் உச்ச நாயகனாக இருந்துவருபவர் நடிகர் யாஷ் (Yash). இவரின் நடிப்பில் குறைவான திரைப்படங்கள் வெளியாகியிருந்தாலும், ஒவ்வொன்றும் மிகவும் பிரம்மாண்டமாக வெற்றி பெற்றிருக்கிறது. அந்த வரிசையில் இவர் இறுதியாக கேஜிஎஃப் 2 (KGF 2) படத்தில் நடித்திருந்தார். கடந்த 2023ம் ஆண்டில் வெளியான இப்படமானது பிரம்மாண்ட வரவேற்பை பெற்று, சூப்பர் ஹிட் வெற்றி திரைப்படமாக அமைந்திருந்தது. இந்த படத்தின் அடுத்ததாக இவர் நடித்துவந்த கேங்ஸ்டர் திரைப்படம்தான் டாக்ஸிக்: தி ஃபேரி டைல் ஃபார் க்ரோன் அப்ஸ் (Toxic: The Fairy Tale for Grown Ups). இந்த படத்தில் யாஷ், ரெட்டை வேடத்தில் நடிக்க, பெண் இயக்குநர் கீது மோகன் தாஸ் (Geetu Mohandas)இயக்கியுள்ளார். இப்படமானது 1965ம் ஆண்டில் கோவாவில் நடந்த ஒரு கேங்ஸ்டர் கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்டிருந்தது.
இப்படத்தின் முதல் கிலிம்ஸ்ப், யாஷின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டிருந்தது. இதில் நடிகை ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகள், சில ஆபாச காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இது தென்னிந்திய மக்கள் மத்தியில் சச்சையை ஏற்படுத்தியிருந்தது. அந்த வகையில் இந்த சர்ச்சைக்குரிய காட்சிகள் குறித்து யாஷ் ஓபனாக பேசியுள்ளார்.




இதையும் படிங்க: அயோத்தி பட இயக்குநருடன் இணையும் விஜய் ஆண்டனி? – வைரலாகும் தகவல்!
டாக்ஸிக் பட சர்ச்சைக்குரிய காட்சி குறித்து மனம் திறந்த யாஷ்:
அண்மையில் ஆங்கில நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த யாஷ், அதில் “இயக்குநர் கீது மோகன்தாஸ் தான் செய்யும் எல்லாவற்றிலும் ஒரு வலுவான உறுதியைக் கொண்டிருக்கிறார். ஆசையின் அளவு, சில உணர்ச்சிகள், காதல் அல்லது சிற்றின்பம் என ஒரு பெண் இயக்குநர் எப்படி முற்றிலும் வித்தியாசமாகக் கையாளுகிறார் என்பதை நான் டாக்ஸிக் திரைப்படத்தில் நான் உணர்ந்தேன்.
இதையும் படிங்க: சமுத்திரக்கனியின் பிறந்தநாளை கொண்டாடிய அரசன் படக்குழு!
பொதுவாக ஆக்ஷன் படங்கள் ஆண் இயக்குநர்களுக்கு மட்டுமே உரியவை. ஒரு பிரம்மாண்டமான ஆக்ஷன் படம், அதுவும் ஒரு பெண் இயக்குநரின் பார்வையில் எடுக்கப்பட்ட கேங்ஸ்டர் படம், மிகவும் புதியதாகவும் புத்துணர்ச்சியூட்டுவதாகவும் இருக்கிறது” என அதில் அவர் பேசியுள்ளார்.
டாக்ஸிக் திரைப்படம் குறித்து நடிகர் யாஷ் வெளியிட்ட பதிவு:
RAYA
Toxic : A Fairy Tale for Grown-Ups in cinemas worldwide on 19-03-2026#ToxicTheMovie pic.twitter.com/fpSdI8utAv
— Yash (@TheNameIsYash) January 8, 2026
இந்த டாக்ஸிக் படமானது கடந்த 2026 மார்ச் 19ம் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின் சில காரணங்களால் இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு ஒத்திவைத்திருந்தது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், படமானது வரும் 2026 ஜூன் 4ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இதில் பல பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ள நிலையில், நிச்சயம் சூப்பர் ஹிட் படமாக அமையும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.