AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Yash: கேஜிஎஃப் பார்ட் 3 உருவாகுமா? ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன யாஷ்!

KGF 3 Movie Update: தென்னிந்திய சினிமாவில் பிரபல நயகனாக இருந்துவருபவர் யாஷ். இவரின் நடிப்பில் பான் இந்திய மொழிகளில் பிரம்மாண்டமான படங்கள் தயாராகிவருகிறது. மேலும் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய யாஷ், கேஜிஎஃப் பார்ட் 3 உருவாகுமா? என்பது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.

Yash: கேஜிஎஃப் பார்ட் 3 உருவாகுமா? ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன யாஷ்!
யாஷ்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 21 Apr 2026 15:14 PM IST

கன்னட சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் சீரியல்களில் நடிகராக நடித்துவந்தவர்தான் யாஷ் (Yash). அதை தொடர்ந்து கன்னட மொழியில் தொடர்ந்து சினிமாவிலும் நாயகனாக நடித்துவந்த நிலையில், பல படங்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில் இவருக்கு ஒட்டுமொத்த இந்திய மக்கள் மத்தியில் பிரபலத்தை கொடுத்திருந்த படம்தான் கேஜிஎஃப் (KGF). இயக்குநர் பிரஷாந்த் நீல் (Prashanth Neel) இயக்கத்தில் கடந்த 2018ம் ஆண்டில் இப்படமானது வெளியாகியிருந்த நிலையில், மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்திருந்தது. இப்படத்தை அடுத்தாக கேஜிஎஃப் பார்ட் 2 (KGF Part 2) படமும் வெளியாகி கிட்டத்தட்ட ரூ 800 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு யாஷ் நடித்துள்ள படம்தான் டாக்ஸிக் (Toxic).

இதை பெண் இயக்குநர் கீது மோகன்தாஸ் (Geetu Mohandas) இயக்கியுள்ள நிலையில், பான் இந்திய படமாக தயாராகியுள்ளது. அந்த வகையில் இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. அந்த வகையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய யாஷ், கேஜிஎஃப் பார்ட் 3 படம் (KGF Part 3) உருவாகுமா என்பது குறித்து பேசியுள்ளார்.

இதையும் படிங்க: அலப்பறை கிளப்புறோம்… தலைவரு நிரந்தரம்… ஷூட்டிங்கை நிறைவு செய்தது ஜெயிலர் 2 படக்குழு

கேஜிஎஃப் பார்ட் 3 படம் குறித்து நடிகர் யாஷ் பேசிய விஷயம்:

அந்த நேர்காணலில் பேசிய யாஷ், “நான் தற்போது டாக்ஸிக், ராமாயணா மற்றும் ராமாயணா பார்ட் 2 படங்களில் கவனம் செலுத்திவருகிறேன், அதனால் நான் உடனடியாக எந்த படத்தையும் திட்டமிடவில்லை. மேலும் இயக்குநர் பிரஷாந்த் நீலும், நானும் தொடர்ந்து கேஜிஎஃப் 3 பட ஐடியா பற்றி விவாதிப்போம். சரியான கதை கிடைத்தவுடன் அதை நிச்சயமாக செயல்படுத்துவேன்” என அதில் அவர் தெரிவித்துள்ளார். தற்போது இந்த தகவலானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயனின் சேயோன் படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது?

கேஜிஎஃப் 3 படம் குறித்து யாஷ் பேசியது பற்றி வைரலாகும் பதிவு:

ராமாயணா திரைப்படம் :

நடிகர் யாஷ், இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணா என்ற படத்தில் ராவணனாக நடித்துள்ளார். இப்படத்தின் முதல் பார்ட் இந்த 2026ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இதில் ரன்பீர் கபூர் ராமனாகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடித்துள்ளனர். ராமாயணா பாகம் 1ல் யாஷ் கடைசி 20 நிமிடம் மட்டுமே வருவார் என கூறப்படுகிறது. மேலும் ராமாயணா பார்ட் 2 படத்தில் அவரின் கதாபாத்திரம் முழுமையாக இருக்கும் என கூறப்படுகிறது.

Follow Us