AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ராமாயணா படத்தில் எனது ராவணன் கதாப்பத்திரம் இப்படிதான் இருக்கும் – நடிகர் யாஷ்

Actor Yash talks about Ramayana Movie: கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் யாஷ். இவர் பாலிவுட் சினிமாவில் உருவாகி வரும் ராமாயணா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். அதுகுறித்து அவர் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ராமாயணா படத்தில் எனது ராவணன் கதாப்பத்திரம் இப்படிதான் இருக்கும் – நடிகர் யாஷ்
ராமாயணா படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 17 Apr 2026 15:16 PM IST

கன்னட மொழியில் முதலில் சீரியல்களின் நடித்ததன் மூலம் கன்னட மொழி மக்களிடையே கவனத்தை ஈர்த்தார் நடிகர் யாஷ். அதனைத் தொடர்ந்து வெள்ளித்திரையில் படங்களில் நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து கன்னட மொழியில் நடித்து வந்த நடிகர் யாஷ் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வந்தார். கன்னட மொழி மக்களிடையே மட்டுமே பிரபலமாக இருந்து வந்த நடிகர் யாஷ் அதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான கேஜிஎஃப் என்ற படத்தின் மூலமாக உலக அளவில் உள்ள மக்களிடையே பிரபலம் ஆனார். தொடர்ந்து இந்தப் படத்திற்கு பிறகு பான் இந்திய நட்சத்திரமாக மாறினார் நடிகர் யாஷ். இந்தப் படம் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலிலும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. கன்னட சினிமாவில் மிகப்பெரிய தாகக்கத்தை இந்தப் படம் ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து நடிகர் யாஷ் நடிப்பில் கேஜிஎஃப் 2 படம் திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இதனைத் தொடர்ந்து நடிகர் யாஷ் நாயகனாக நடித்து உள்ள படம் டாக்ஸிக் இந்தப் படம் திரையரங்குகளில் விரைவில் வெளியாக உள்ளது. மேலும் இந்தி மொழியில் நடிகர் யாஷ் ராமாயணா படத்தில் நடித்து உள்ளார். இது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ராமாயணா படத்தில் எனது ராவணன் கதாப்பத்திரம் இப்படிதான் இருக்கும்:

இராவணன் மிகவும் சிக்கலான ஒரு கதாபாத்திரம்; அவனைத் தோற்கடிப்பதற்காக விஷ்ணுவை இராமனாக அவதாரம் எடுக்கத் தூண்டிய அளவற்ற சக்தி கொண்ட ஒரு மாபெரும் வில்லன். அவன் ஒரு சிறந்த இசைக்கலைஞன், கற்றறிந்த அறிஞர், மூர்க்கமான போர்வீரன், மற்றும் தன் மக்களால் போற்றப்பட்ட ஒரு மன்னன். ஆயினும், பகுத்தறிவு தடுமாறி, செயல்கள் வழிதவறும்போது, ​​மாபெரும் மனிதர்கள்கூட வீழ்ச்சியைச் சந்திக்க நேரிடும் என்றும் நடிகர் யாஷ் தெரிவித்து இருந்தார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… Jana Nayagan: ஜன நாயகன் பட கசிவு விவகாரத்தில் திருப்பம்.. மேலும் மூவர் கைது!

இணையத்தில் வைரலாகும் நடிகர் யாஷின் பேச்சு:

Also Read… பிரதீப் ரங்கநாதனின் 4-வது 100 கோடி படமாக இதை மாற்ற முயற்சிக்கிறோம் – விக்னேஷ் சிவன்

Follow Us