AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஜன நாயகன் படம் இணையத்தில் கசிந்தது வேதனையாகவும் பயமாகவும் இருந்தது – இயக்குநர் விக்னேஷ் ராஜா

Director VIgnesh Raja talks about Jana Nayagan movie leak: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குநராக வலம் வருகிறார் இயக்குநர் விக்னேஷ் ராஜா. இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் ஜன நாயகன் படம் இணையத்தில் கசிந்தது குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது

ஜன நாயகன் படம் இணையத்தில் கசிந்தது வேதனையாகவும் பயமாகவும் இருந்தது – இயக்குநர் விக்னேஷ் ராஜா
விக்னேஷ் ராஜாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 16 Apr 2026 15:01 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒட்டுமொத்த திரையுலகையும் உலுக்கும் சம்பவம் ஒன்று நடந்தது. அது என்ன என்றால் நடிகர் தளபதி விஜயின் நடிப்பில் உருவாகி சென்சார் பிரச்சனை காரணமாக திரையரங்குகளில் வெளியாகாமல் ஒத்திவைக்கப்பட்ட ஜன நாயகன் படம் இணையத்தில் கசிந்தது. இந்த சம்பவம் ஜன நாயகன் படக்குழுவினர் மட்டும் இன்றி ஒட்டுமொத்த திரையுலகினரையும் சோகத்தில் ஆழ்த்தியது. அதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் மற்றும் ஜன நாயகன் படத்திற்கு ஆதவராக பிரபலங்கள் பலர் குரல் கொடுத்தனர். மேலும் இந்த மாதிரியான நிகழ்வுகள் இனி நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திரையுலகினர் கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து இந்தப் படத்திற்கு நடந்தது தங்களது படங்களுக்கும் நடந்துவிட கூடாது என்று திரையுலகினர் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர்.

இந்த நிலையில் ஜன நாயகன் படம் இணையத்தில் கசிந்தது குறித்து இயக்குநர் விக்னேஷ் ராஜா பேசியுள்ளார். இவரது இயக்கத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடித்து உள்ள இந்தப் படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 30-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் புரமோஷன் பணிகளில் பிசியாக இருக்கும் படக்குழுவினர் தொடர்ந்து பேட்டிகளை அளித்து வருகின்றனர். அந்தப் பேட்டியில் இயக்குநர் விக்னேஷ் ராஜா ஜன நாயகன் படம் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஜன நாயகன் இணையத்தில் கசிந்தது வேதனையாகவும் பயமாகவும் இருந்தது:

அதன்படி இயக்குநர் விக்னேஷ் ராஜா அளித்தப் பேட்டியில் கூறியதாவது, ஜன நாயகன் கசிவு வேதனையாகவும் பயமாகவும் இருந்தது. அது கசிந்தவுடன், கூகிள் டிரைவில் சேமித்து வைத்திருந்த கர படத்தின் அனைத்துக் காட்சிகளையும் நாங்கள் நீக்கிவிட்டோம். நாம் அனைவரும் நம்பிக்கையின் அடிப்படையில் பயணிக்கிறோம், நாம் இன்னும் கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், நீங்கள் அதற்கான விலையைக் கொடுத்து, திரைப்படங்களைத் திரையரங்குகளில் மட்டுமே பார்க்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… அப்சரா பென்சிலுக்கும் நட்ராஜ் பென்சிலுக்கும் உள்ள வித்தியாசம் 90ஸ் கிட்ஸ்களுக்கு தான் தெரியும் – தெலுங்கில் வெளியான இந்த 90ஸ் ஏ மிடில் கிளாஸ் பயோபிக் தொடரை ஓடிடியில் மிஸ் செய்யாதீர்கள்

இணையத்தில் வைரலாகும் விக்னேஷ் ராஜா பேச்சு:

Also Read… 22 ஆண்டுகளுக்குப் பிறகு சூர்யா – த்ரிஷா ஒன்னா நடிக்கிறாங்க… ஆர்.ஜே.பாலாஜி

Follow Us