AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அர்ஜுன் தாஸ் – ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் வெளியான #Love வெப் சீரிஸ் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ

Love web series review here | நடிகர் அர்ஜுன் தாஸ் நாயகனாகவும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நாயகியாகவும் நடித்து நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி உள்ள லவ் இணையதள தொடர் எப்படி இருக்கிறது என்று இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

அர்ஜுன் தாஸ் – ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் வெளியான #Love வெப் சீரிஸ் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
லவ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 26 Oct 2026 18:21 PM IST

தமிழ் சினிமாவில் இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என பண்முகத்தன்மை கொண்டவராக வலம் வருபவர் பாலாஜி மோகன். தமிழ் சினிமாவில் கடந்த 2012-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகம் ஆனார். இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து அடுத்தடுத்து இவரது இயக்கத்தில் வெளியான வாயை மூடி பேசவும், மாரி, மாரி 2 என அடுத்தடுத்தப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் இயக்குநர் பாலாஜி மோகன் எழுதி இயக்கி நேரடியாக ஓடிடியில் வெளியாகி உள்ள லவ் என்ற இணையதள தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த தொடர் எப்படி இருக்கிறது என்பதை தற்போது பார்க்கலாம்.

இந்த தொடரில் நடிகர் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடித்து உள்ள நிலையில் நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நாயகியாக நடித்து உள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் அர்ஜுன் சிதம்பரம், காயத்ரி ஹரிஹரன், நமிதா கிருஷ்ணமூர்த்தி, ஹரிணி சுந்தரராஜன், அபிஷேக் ஜோசப் ஜார்ஜ், ஆர் பத்ரீ, அர்ஜுன் மனோகர் என பலர் இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

#Love இணையதள தொடரின் கதை என்ன?

ஃபௌண்ட் என்ற ஒரு டேட்டிங் ஆப்பை ஸ்டார்டப் கம்பெணியாக தொடங்கி உள்ள ஐஸ்வர்யா லட்சுமி முன்பே புழக்கத்தில் உள்ள ஃபைண்ட் மை பே என்ற ஆப்பிற்கு போட்டியாக இருக்கிறார். அந்த ஃபைண்ட் மை பே என்ற டேட்டிங் ஆப்பின் அதிகப்படியான ஷேர் ஹோல்டர் நாயகன் அர்ஜுன் தாஸ். தொடர்ந்து வருடத்திற்கு ஒரு முறை அளிக்கப்படும் இந்த ஆப்களுக்கான விருதினை அர்ஜுன் தாஸின் ஆப்தான் வெற்றியைப் பெற்று வருகின்றது.

இப்படி இருக்கும் நிலையில் மூன்றாவது முறையாகவும் அவர்கள் தான் வெற்றிப்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதில் ஐஸ்வர்யா லட்சுமியின் ஃபௌண்ட் ஆப் வெற்றிப் பெறும் சூழல் நிலவுகிறது. இதனால் அர்ஜுன் தாஸின் தந்தை தனது இன்ஃபியூலன்ஸை பயன்படுத்தி அந்த விருதை ஃபைண்ட் மை பேவிற்கு கிடைக்கும்படி செய்கிறார்.

Also Read… Scene: சீன் படத்தின் கதையை சொல்லும்போது சூர்யாவின் ரியாக்ஷன் – இயக்குநர் ஜித்து மாதவன் பேச்சு!

இந்த சம்பவத்திற்கு பிறகு சந்தித்தித்துக்கொள்ளும் அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா இருவம் பேசும் போது மாறி மாறி அவர்களின் ஆப்களை பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்கிறார்கள். இந்த போட்டியை 60 நாட்களுக்கு வைத்திருந்த நிலையில் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதா இல்லையா என்பதே இந்த தொடரின் கதை. இது தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

Also Read… 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் பிரபு தேவா – சிம்ரன் கூட்டணி… வைரலாகும் தகவல்!

Follow Us