AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

50-வது நாளில் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி… கொண்டாட்டத்தில் போட்டியாளர்கள்

Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கியது. இந்த நிலையில் இன்றுடன் நிகழ்ச்சி 50-வது நாளை எட்டியுள்ள நிலையில் முதல் புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது வைரலாகி வருகின்றது.

50-வது நாளில் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி… கொண்டாட்டத்தில் போட்டியாளர்கள்
பிக்பாஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 25 Oct 2026 11:52 AM IST

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் மொழியில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகின்றது. தொடர்ந்து 9 சீசன்கள் தமிழ் நிகழ்ச்சியில் வெற்றிகரமாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து தற்போது பிக்பாஸ் தமிழ் சீசன் 10 (Bigg Boss Tamil Season 10) நிகழ்ச்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் 06-ம் தேதி 2026-ம் ஆண்டு முதல் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தொடக்கத்தில் மொத்தம் 24 போட்டியாளர்கள் பங்கேற்றனர். அதில் 8 பேர் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நிலையில் தற்போது 16 போட்டியாளர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் எஞ்சி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

தொடர்ந்து தற்போது 7-வது வாரம் முடிவுக்கு வந்த நிலையில் கடந்த வாரம் முழுவதும் சர்வைவல் பேட்டல் டாஸ்க் பிக்பாஸ் வீட்டில் நடைப்பெற்றது. இந்த போட்டியில் அதிக அளவில் நீல அணியினர் வெற்றியைப் பெற்று இருந்தாலும் சிவப்பு நிற அணியினரின் செயல்களே மக்களிடையே ஆர்வத்தை தூண்டியது குறிப்பிடத்தக்கது.

50-வது நாளில் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி:

இந்த நிலையில் இந்த வாரம் உடல்நலக் குறைவு காரணாம விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்காத நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார். நேற்றைய நிகழ்ச்சியை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கியது மக்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நிலையில் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சி 50-வது நாளை எட்டியுள்ள நிலையில் நிகழ்ச்சி குழு முதல் புரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் ரம்யா கிருஷ்ணன் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… Love Bite: சந்தானத்தின் லவ் பைட் படத்தின் ஷூட்டிங் ஓவர் – படக்குழு பகிர்ந்த வீடியோ!

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… இளங்காத்து வீசுதே இசை போல பேசுதே… 23 ஆண்டுகளைக் கடந்தது பாலாவின் பிதாமகன் படம்!

Follow Us