AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

எனது முந்தைய படங்களை தமிழ் ரசிகர்கள் ரசித்ததில் எனக்கு மகிழ்ச்சி – சீன் பட இயக்குநர் பேச்சு

Director Jithu Madhavan | மலையாள சினிமாவில் இயக்குநராகவும் திரைக்கதை ஆசிரியராகவும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருபவர் இயக்குநர் ஜித்து மாதவன். இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் தமிழ் ரசிகர்கள் குறித்து பேசியுள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

எனது முந்தைய படங்களை தமிழ் ரசிகர்கள் ரசித்ததில் எனக்கு மகிழ்ச்சி – சீன் பட இயக்குநர் பேச்சு
ஜித்து மாதவன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 22 Oct 2026 11:21 AM IST

மலையாள சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் ஜித்து மாதவன் (Jithu Madhavan). இவரது இயக்கத்தில் மலையாள சினிமாவில் வெளியான படங்கள் மலையாள சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய மொழிகளிலும் குறிப்பாக தமிழ் சினிமா ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மலையாள சினிமாவில் இயக்குநராக மட்டும் இன்றி திரைக்கதை ஆசிரியராகாவும் பணியாற்றி வருகிறார். அதன்படி இவர் மலையாள சினிமாவில் ரோமான்சம் என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார். அதன்படி ஜித்து மாதவன் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து இரண்டாவதாக இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் வெளியானது ஆவேஷம் என்ர படம். நடிகர் ஃபகத் பாசில் நடிப்பில் இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

மலையாள சினிமாவில் இந்த இரண்டு படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது மூன்றாவது படத்திற்காக நடிகர் சூர்யா உடன் கூட்டணி வைத்தார் இயக்குநர் ஜித்து மாதவன். இந்தப் படத்திற்கு சீன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் படம் வருகின்ற 6-ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இயக்குநர் ஜித்து மாதவன் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

எனது முந்தைய படங்களை தமிழ் ரசிகர்கள் ரசித்ததில் எனக்கு மகிழ்ச்சி:

அதன்படி  இயக்குநர் ஜித்து மாதவன் அளித்தப் பேட்டியில் பேசியதாவது, எனது முந்தைய இரண்டு படங்களான ரோமாஞ்சம் மற்றும் ஆவேஷம் ஆகியவற்றைத் தமிழ் ரசிகர்கள் ரசித்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. சீன் திரைப்படம் குற்றம், நகைச்சுவை, காதல் மற்றும் விறுவிறுப்பான திரில்லர் அம்சங்கள் கலந்த ஒன்றாக இருக்கும். இதில் சூர்யா சார் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில், ஸ்டைலான தோற்றத்துடன், நகைச்சுவை மற்றும் அதிரடி கலந்த நடிப்பை வெளிப்படுத்துவார்.

நஸ்ரியா இதில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர் ஆவேஷம் படத்தின் தயாரிப்பாளராக இருந்தவர். நீண்ட காலமாகத் தமிழ்ப் படங்களில் நடிக்காததால், இந்தப் படத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொள்வாரா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. ஆனால், கதையை விவரித்தவுடன் அவர் உடனடியாகச் சம்மதித்துவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.

Also Read… எங்கள் மூர்த்தி அண்ணன் நமோவுக்கு ஒரு கார் பார்சல்… ஜெயிலர் 2 படம் குறித்து பாராட்டி பேசிய நடிகர் சசிக்குமார்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… 2026ல் வெளியாகி ஹிட்டடித்த தென்னிந்திய பார்ட் 2 & 3 படங்கள் என்னென்ன?

Follow Us