AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சூர்யாவின் சீன் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது இருக்கும்? – வைரலாகும் தகவல்!

Scene Movie Trailer Update: மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவந்த 47வது திரைப்படம்தான் சீன். இந்த படமானது சிறப்பான திரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், 2026ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல் இணையத்தில் வைரலாகிவருகிறது.

சூர்யாவின் சீன் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது இருக்கும்? – வைரலாகும் தகவல்!
சூர்யாவின் சீன் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 19 Oct 2026 08:35 AM IST

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக இருந்துவருபவர் நடிகர் சூர்யா (Suriya). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல படங்கள் உருவிக்கப்பட்டுவருகிறது. இறுதியாக இவரின் நடிப்பில் வெளியான படம் விஸ்வநாத் & சன்ஸ் (Vishwanath And Sons). இதை தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி (Venky Atluri) இயக்கியிருந்த நிலையில், கடந்த 2026ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இந்த படமானது சூர்யாவின் மாபெரும் வரவேற்பை கொடுத்தது. இந்த படத்திற்கு பின் 2026ம் ஆண்டில் 3வது வெளியாக காத்திருக்கும் புத்தம் புதிய திரைப்படம்தான் சீன் (Scene). இதை மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் (Jithu Madhavan) இயக்கியுள்ள நிலையில், ஜோதிகா மற்றும் சூர்யா தனது புதிய தயாரிப்பு நிறுவனமான ழகரம் ஸ்டூடியோஸ் கீழ் தயாரித்துள்ளனர்.

இதில் சூர்யா, நஸ்ரியா மற்றும் நஸ்லென் போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது 2026ம் ஆண்டு நவம்பர் 6ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகும் நிலையில், இதன் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது இருக்கும் என்பது தொடர்பான தகவல்கள் இணையத்தில் பரவிவருகிறது.

இதையும் படிங்க: திரையரங்குகள் அதிர்கின்றன..! ஜெயிலர் 2 படத்திற்கு ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்புக்கு நன்றி சொன்ன இயக்குநர் நெல்சன்!

சூர்யாவின் சீன் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது இருக்கும்:

இந்த சீன் படத்தில் நடிகர் சூர்யா புலனாய்வு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படத்தில் சூர்யா இன்பராஜ் எந்த அதிகாரி என்ற வேடத்தில் நடித்துள்ள நிலையில், இப்படத்தில் நடக்கும் குற்றப்பின்னணியை நஸ்ரியாவுடன் கண்டுபிடிப்பதுபோல இப்படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது. இந்த படத்தில் மெயின் வில்லனாக நடிகர் நஸ்லென் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: நடிகர் பிரபாஸின் ஸ்பிரிட் படத்தின் நியூ ரிலீஸ் தேதி இதுதான் – வெளியானது அப்டேட்

இப்படமானது 2026ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ள நிலையில், இன்னும் 3 வாரங்கள் மட்டுமே உள்ளது. அந்த விதத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்து இணையத்தில் தகவல்கள் பரவிவருகிறது. சூர்யாவின் சீன் படத்தின் ட்ரெய்லர் 2026ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி அல்லது 25ம் தேதியில் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

சூர்யாவின் சீன் படத்தின் ட்ரெய்லர் குறித்து இணையத்தில் வைரலாகிவரும் பதிவு:

சூர்யாவின் இந்த சீன் படமானது இந்த 2026ம் ஆண்டில் வெளியாகும் அவரின் 3வது படமாகும். இந்த படத்தின் மீது தமிழ் மற்றும் மலையாள ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகள் இருந்துவருகிறது. இந்த படத்தில் பல மலையாள நடிகர்களே நடித்திருக்கும் நிலையில், இப்படத்திற்கும் சுஷின் ஷ்யாம் என்ற மலையாள இசையமைப்பாளாரே இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2026ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் இப்படம் நிச்சயம் வரவேற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us