நடிகர் பிரபாஸின் ஸ்பிரிட் படத்தின் நியூ ரிலீஸ் தேதி இதுதான் – வெளியானது அப்டேட்
Spirit Movie New Release Date Viral On Social Media | நடிகர் பிரபாஸ் நடிப்பில் தெலுங்கு சினிமாவில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஸ்பிரிட். இந்தப் படத்தின் புது ரிலீஸ் தேதி தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் பிரபாஸ். கடந்த 2002-ம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கிய இவர் தொடர்ந்து அதிக அளவில் படங்கள் நடித்து உள்ளார். இவரது நடிப்பில் அடுத்தடுத்து தெலுங்கு சினிமாவில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் தெலுங்கு சினிமாவில் இறுதியாக திரையரங்குகளில் வெளியாகி உள்ள படம் தி ராஜா சாப். இந்தப் படம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. அதனைத் தொடர்ந்து நடிகர் பிரபாஸ் நடிப்பில் தெலுங்கு சினிமாவில் ஃபௌசி மற்றும் ஸ்பிரிட் என இரண்டு படங்களின் பணிகளும் விறுவிறுப்பாக தற்போது நடைப்பெற்று வருகின்றது.
இந்த நிலையில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் விறுவிறுப்பாக உருவாகி வரும் நிலையில் எந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். அந்த வகையில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் தெலுங்கு சினிமாவில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஸ்பிரிட்.




நடிகர் பிரபாஸின் ஸ்பிரிட் படத்தின் நியூ ரிலீஸ் தேதி இதுதான்:
இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இந்த ஸ்பிரிட் படத்தை எழுதி இயக்கி உள்ளார். முன்னதாக இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பிறகு அது ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் ஸ்பிரிட் படத்தின் புது ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தப் படம் வருகின்ற 29-ம் தேதி அக்டோபர் மாதம் 2027-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… Sai Pallavi: அது ரொம்ப கஷ்டமாக இருந்தது… ஒரு பாடமாக ஏற்றுக்கொண்டேன் – சாய் பல்லவி சொன்ன விஷயம்
ஸ்பிரிட் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Prabhas Anna’s new poster — Shades on. Spirit always. #Spirit @OneBadHabit
#Prabhas @imvangasandeep @tripti_dimri23 @vivekoberoi @rameemusic @sureshsrajan #BhushanKumar #KrishanKumar @ShivChanana @neerajkalyan_24 @InSpiritMode @VangaPictures @TSeries @tseriessouth @anilandbhanu @WallsAndTrends @Narsing35287051
@sivadow55122— Bhadrakali Pictures (@VangaPictures) October 18, 2026
Also Read… தேவாவின் மறைவு – இசைப் பணிகளை நிறுத்திய இளையராஜா – வெளியான தகவல்