AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Nelson Dilipkumar: பேக் டூ பேக்.. நெல்சன் திலீப்குமார் கைவசம் உள்ள படங்கள் என்னென்ன தெரியுமா?

Nelson Dilipkumars Next Films: தென்னிந்திய சினிமாவில் சிறந்த மற்றும் பிரம்மாண்ட இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் நெல்சன் திலீப்குமார். இவரின் இயக்கத்தில் இறுதியாக ஜெயிலர் 2 படமானது வெளியாகி பான் இந்திய வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த படத்திற்கு பிறகு இவரின் கைவசம் உள்ள படங்கள் என்னென்ன என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.

Nelson Dilipkumar: பேக் டூ பேக்.. நெல்சன் திலீப்குமார் கைவசம் உள்ள படங்கள் என்னென்ன தெரியுமா?
நெல்சன் திலீப்குமார்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 15 Oct 2026 21:32 PM IST

கோலிவுட் சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் நெல்சன் திலீப்குமார் (Nelson Dilipkumar). இவரின் இயக்கத்தில் முதல்வர் விஜய் (CM Vijay) முதல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth) வரை பல்வேறு நடிகர்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். அந்த விதத்தில் இறுதியாக இவர் இயக்கத்தில் வெளியான திரைப்படம்தான் ஜெயிலர் 2 (Jailer 2). இப்படமானது (15/10/2026) அன்று உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இந்த படத்தை இயக்குநர் நெல்சன் இயக்க, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படமானது 2023ம் ஆண்டில் வெளியான ஜெயிலர் படத்தின் தொடர்ச்சியான கதைக்களத்தில், மேலும் அதிக ஆக்ஷன் கதைக்களத்தில் அமைந்திருந்தது. இப்படத்தில் தமிழ் சினிமா முதல் இந்தி சினிமா வரை பல்வேறு உச்ச நட்சத்திர நடிகர்களும் இணைந்து நடித்திருந்தனர்.

இந்த படம் இவருக்கு சிறப்பான கதைக்களத்தில் அமைந்த நிலையில், பல்வேறு நடிகர்கள் மற்றும் ரசிகர்களை இவரை பாராட்டிவருகிறார்க்ள. இப்படத்திற்கு பின் இவரின் கைவசம் உள்ள படங்கள் என்னென்ன என்பது குறித்து இணையத்தில் தகவல்கள் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: மோகன்லாலின் காட்சிகளை நீக்குவது தேவையற்றது.. ஆடை வடிவமைப்பாளர் ஜிஷாத் ஷம்சுதீன் பதிவு!

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கைவசம் உள்ள திரைப்படங்கள் :

இறுதியாக இவர் ஜெயிலர் 2 படத்தை இயக்கியிருக்கும் நிலையில், இதன் பிறகு ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் KHxRK என்ற படத்தை இயக்கவுள்ளார். இதை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதன் பிறகு தெலுங்கில் ஜூனியர் என்டிஆர்-ன் நடிப்பில் அதிரடி ஆக்ஷன் படம் ஒன்றை இயக்குகிறாராம்.

இதையும் படிங்க: பிக் பாஸில் டைமென்டை திருடிய டிடிஃஎப் வாசன்.. மாஸ்டர் பிளான் போடும் அவினாஷ்!

இதற்கு பின் நடிகர் சூர்யாவின் 50வது திரைப்படத்தையும் இவரே இயக்குவதாக வட்டாரங்களில் தகவல்கள் பரவிவருகிறது. மேலும் தனுஷின் படத்தை இயக்குவதாக கூறப்பட்டது. ஆத்தாள் இது உண்மையா என தெரியவில்லை. மேலும் ஜெயிலர் 2 படத்திலிருந்து ஜெயிலர் 3 படத்திற்கு லீட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், ஜெயிலர் 3 படம் வருவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளதாம்.

நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ள படங்கள் குறித்து வைரலாகும் எக்ஸ் பதிவு:

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தற்போது சினிமாவில் உச்ச இயக்குநர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார். பேக் டூ பேக் ஹிட் படங்களை இவர் கொடுத்துவரும் நிலையில், இவரின் இயக்கத்தில் அடுத்தடுத்து யார் நடிக்கவுள்ளார் என இணையத்தில் தகவல்கள் வைரலாகிவருகிறது. இதில் KHxRK திரைப்படம் மட்டுமே உறுதியாகியுள்ள நிலையில், அடுத்தடுத்த படங்கள் பற்றிய அறிவிப்புகள் விரைவில் வரலாமா என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us