AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Nelson Dilipkumar: நெகட்டிவ் கட் பண்ணி அனுபிறீங்க.. அது என்ன ஹிமாலயன் ரகசியமா? – ரஜினியிடம் கேள்வி கேட்ட நெல்சன்!

Rajinikanth Speech: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் ரஜினிகாந்த். இவரின் நடிப்பில் தமிழில் வெளியாகி காத்திருக்கும் பிரம்மாண்ட திரைப்படம்தான் ஜெயிலர் 2. இப்படத்தின் நிகழ்ச்சி ஒன்றில், ரஜினிகாந்த் மற்றும் நெல்சன் பேசியது தொடர்பான பதிவை படக்குழு பகிர்ந்துள்ளது.

Nelson Dilipkumar: நெகட்டிவ் கட் பண்ணி அனுபிறீங்க.. அது என்ன ஹிமாலயன் ரகசியமா? – ரஜினியிடம் கேள்வி கேட்ட நெல்சன்!
நெல்சன் மற்றும் ரஜினிகாந்த்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 09 Oct 2026 13:06 PM IST

கோலிவுட் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக இருந்துவருபவர்தான் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் உருவாக்கப்பட்டுள்ள புதிய திரைப்படம்தான் ஜெயிலர் 2 (Jailer 2). இந்த படத்தை தமிழ் முன்னணி இயக்குநர் நெல்சன் திலீப்குமார் (Nelson Dilipkumar) இயக்கியுள்ள நிலையில், சன் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். ரஜினிகாந்த் முன்னணி நட்சத்திரமாக நடித்துள்ள இந்த படத்தில் பான் இந்திய பிரபலங்கள் பலரும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தில் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) மற்றும் ஹிருத்திக் ரோஷன் போன்ற பிரபலங்களும் கேமியோ வேடத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்தின் 172வது திரைப்படமாக இந்த ஜெயிலர் 2 படமானது உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இந்த படமானது வருகின்ற 2026ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. இப்படத்தின் படக்குழு மொத்தமாக ஒரு நேர்காணலில் கலந்துகொண்டிருந்தனர். அந்த நேர்காணலில் நெல்சன் ரஜினிகாந்திடம், உங்களின் நெகட்டிவ் விமர்சனங்களை கட் பண்ண என்ன டிரிக் பயன்படுத்துகிறீர்கள் என கேள்வி கேட்டுள்ளார்.

இதையும் படிங்க: அரசன் பட இறுதிக்கட்ட ஷூட்டிங்கில் இணைந்த சிலம்பரசன் – வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்!

ரஜினிகாந்திடம் நெகட்டீவ் விமர்சனங்கள் தவிர்ப்பது எவ்வாறு என கேள்வி கேட்ட நெல்சன்:

அந்த நிகழ்ச்சி நேர்காணலில் நெல்சன் திலீப்குமார், ரஜினிகாந்திடம் “உங்க கிட்ட பேசும் போது நெகட்டிவிட்டி கட் பண்ணி அனுப்புங்க ல.. எதுவாது ஹிமாலய ராகசியமா இல்ல நீங்க பாத்துக்கு வாய்க்கு வந்தத பேசிட்டிங்களா?” என கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், “நான்தான் வேணான்னு சொன்னே லா முதலிலே” என சிரித்தபடியே பேசியிருந்தார். தற்போது இது தொடர்பான பதிவை ஜெயிலர் 2 படக்குழு பகிர்ந்துள்ளது.

இதையும் படிங்க: இந்தியாவின் வறட்சி காலத்தில் ஒரு நாயகன்.. வெளியானது விஜய் தேவரகொண்டாவின் அதிரடி ஆக்ஷன் ரணபாலி ட்ரெய்லர்

ரஜினிகாந்த் மற்றும் நெல்சன் திலீப்குமார் பேசியது தொடர்பாக ஜெயிலர் 2 படக்குழு பகிர்ந்த பதிவு:

ஜெயிலர் 2 படமானது வரும் 2026ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. அதை முன்னிட்டு இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெறுகிறது. இப்படத்திற்கு யு /ஏ தர சென்சார் சான்றிதழை சென்சார் குழு கொடுத்துள்ளது. இதை 16 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் திரையரங்குகள் சென்று பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us