AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Ranabaali: இந்தியாவின் வறட்சி காலத்தில் ஒரு நாயகன்.. வெளியானது விஜய் தேவரகொண்டாவின் அதிரடி ஆக்ஷன் ரணபாலி ட்ரெய்லர்

Ranabaali Movie Trailer: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக இருந்துவருபவர் விஜய் தேவரகொண்டா. இவரின் நடிப்பில் தென்னிந்திய மொழிகளில் மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம்தான் ரணபாலி. இப்படமானது அதிரடி ஆக்ஷன் மற்றும் 60-களில் நடந்த உண்மையான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இதன் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

Ranabaali: இந்தியாவின் வறட்சி காலத்தில் ஒரு நாயகன்.. வெளியானது விஜய் தேவரகொண்டாவின் அதிரடி ஆக்ஷன் ரணபாலி ட்ரெய்லர்
ரணபாலி திரைப்பட ட்ரெய்லர்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 08 Oct 2026 19:46 PM IST

தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர்தான் விஜய் தேவரகொண்டா (Vijay Deverakonda). இவரின் நடிப்பில் தென்னிந்திய மொழிகளில் பல படங்கள் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் கிங்டம் (Kingdom). இந்த படமானது கடந்த 2025ம் ஆண்டு ஜூலை இறுதியில் வெளியாகியிருந்தது. இந்த படமானது விஜய் தேவரகொண்டாவுக்கு ஓரளவு வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்திற்கு பின் தெலுங்கு இயக்குநர் ராகுல் சங்கிருத்யன் (Rahul Sankrityan) இயக்கத்தில் இவர் நடித்துவந்த புதிய திரைப்படம்தான் ரணபாலி (Ranabaali). இந்த படமானது கடந்த 1960-களில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இந்தியாவில் இருந்த பஞ்சம் தொடர்பான கதையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடிக்க, அவருடன் ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) நாயகியாக நடித்துள்ளார்.

இந்த ஜோடியானது கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்து இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படமானது மிகவும் பிரம்மாண்டமான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இதன் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது. தற்போது இப்படத்தின் ரிலீஸ் கிட்ட நெருங்கியுள்ள நிலையில், இதன் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: கமல்ஹாசனின் இந்தியன் 3 பட கதை இப்படியா இருக்கும் – இணையத்தில் வைரலாகும் தகவல்!

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனாவின் ரணபாலி படத்தின் ட்ரெய்லர் எக்ஸ் பதிவு:

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகாவின் ரணபாலி பட ட்ரெய்லர் எப்படி இருக்கு:

இந்த ட்ரெய்லரானது 1960 காலகட்டத்தில் வெள்ளையர்கள் ஆட்சிகளாத்தில் இந்தியாவில் ஏற்பட்ட பஞ்சம் குறித்த கதையில் தெரிகிறது. இந்த வெள்ளையர்களின் ஆட்சியை எதிர்க்கும் இந்தியனாகவும், தனது கிராமத்தை காக்கும் நாயகனாகவும் விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார். இதில் அவரின் மனைவியாக ராஷ்மிகா முற்றிலும் நளினமான பெண்ணாக நடித்திருக்கிறார். இப்படமானது தெய்வீகம், ஆக்ஷன் மற்றும் அதிரடி கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

ரணபாலி படத்தின் சென்சார் அப்டேட்:

இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ளனர். கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு பின் இந்த ஜோடியானது இதில் இணைந்து நடித்துள்ளது. இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா ரணபாலி என்ற வேடத்தில் நடித்துள்ள நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனா ஜெயம்மா என்ற வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குநர் ராகுல் சங்கிருத்யன் இயக்க, இசையமைப்பாளர் அஜய் அடலு இசையமைத்துள்ளார்.

இதையும் படிங்க: ஆத்தி இவ யார்ரா… சூர்யாவின் சீன் படத்தின் முதல் சிங்கிள் வெளியானது!

இவரின் இசையில் இப்படத்திலிருந்து இதுவரைக்கும் 1 பாடல் மட்டுமே வெளியாகியுள்ளது. இப்படத்தில் அதிக ஆக்ஷன், சண்டைகள் மற்றும் அதிரடி காட்சிகள் இருக்கும் நிலையில், ஏ தரச் சென்சார் கிடைக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இப்படம் வரும் 2026ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதியில் உலகமெங்கும் பல்வேறு மொழிகளில் வெளியாகவுள்ளது எப்போது குறிப்பிடத்தக்கது.

Follow Us