AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அடிமைகளாக வாழும் மக்களை காக்க வருகிறான் ரணபாலி – வெளியானது டீசர்

RANABAALI Teaser The Savage's Oath | நடிகர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ரணபாலி. இந்தப் படத்தின் டீசரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ள நிலையில் அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அடிமைகளாக வாழும் மக்களை காக்க வருகிறான் ரணபாலி – வெளியானது டீசர்
ரணபாலிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 09 Sep 2026 17:35 PM IST

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவரது நடிப்பில் தெலுங்கு சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து தெலுங்கு சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி பான் இந்திய மொழிகளில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தாலும் விஜய் தேவரகொண்டா நடிகை ராஷ்மிகா மந்தனா உடன் கூட்டணி சேர்ந்து நடிக்கும் படங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா நடிப்பில் சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது உருவாகி வரும் படம் ரணபாலி. சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் நடைபெறுவது போல இந்தப் படத்தின் கதை உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் போதே நடிகர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவருக்கும் திருமணம் நடைப்பெற்றது. திரையில் ரசிகர்கள் கொண்டாடிய ஜோடி நிஜத்திலும் ஜோடி சேர்ந்ததை அவர்களின் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். இந்த நிலையில் அவர்கள் இருவரும் இணைந்து நடித்த ரணபாலி படத்தின் மீதும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்தது.

அடிமைகளாக வாழும் மக்களை காக்க வருகிறான் ரணபாலி:

தொடர்ந்து ரணபாலி படம் குறித்து செய்திகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் படம் வருகின்ற அக்டோபர் மாதம் 16-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தின் டீசரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதில் பிரிட்டிஸ் காலத்தில் அடிமைகளாக அவதிப்படும் மக்களை காக்கும் ரணபாலியாக நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்துள்ளது தெரிகிறது. மேலும் இந்தப் படத்தின் டீசர் தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

Also Read…  Malavika Mohanan: சர்தார் 2 படத்தில் அப்படிப்பட்ட காட்சி ஒன்று இருக்கு – மாளவிகா மோகனன் சொன்ன சீக்ரட்!

ரணபாலி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Suriya47: அன்பான ஃபேன்ஸ் ரெடியா-ஆ? சூர்யா47 படம் குறித்து வெளியான முக்கிய அப்டேட்!

Follow Us