AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

விடுதலை படத்தை விட மண்டாட்டி படமே அதிக சவாலானது – நடிகர் சூரி

Actor Soori talks about Mandaadi Movie | நடிகர் சூரியின் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் மண்டாட்டி. இந்தப் படம் குறித்து நடிகர் சூரி சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியது இணையத்தில் ரசிகர்களிடையே தற்போது வைரலாகி வருகின்றது.

விடுதலை படத்தை விட மண்டாட்டி படமே அதிக சவாலானது – நடிகர் சூரி
நடிகர் சூரிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 08 Sep 2026 14:18 PM IST

தமிழ் சினிமாவில் தற்போது தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் நாயகனாக வலம் வருகிறார் நடிகர் சூரி. இவர் காமெடி நடிகரில் இருந்து தற்போது நாயகனாக அறிமுகம் ஆகி உள்ளார். தொடர்ந்து காமெடி கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது நாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நிலையில் அந்தப் படங்கள் வரிசையாக ஹிட் அடித்து வருகின்றது. இந்த நிலையில் நடிகர் சூரி நாயகனாக நடித்து அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் மண்டாட்டி. இந்தப் படத்தை இயக்குநர் மதிமாறன் புகழேந்தி எழுதி இயக்கி உள்ளார். நடிகர் சூரி உடன் இணைந்து நடிகர்கள் பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.

மேலும் இந்தப் படம் வருகின்ற 2026-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு பிசியாக இருக்கின்றது. இந்த நிலையில் நடிகர் சூரி மண்டாட்டி படம் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

விடுதலை படத்தை விட மண்டாட்டி படமே அதிக சவாலானது:

அதன்படி அவர் அந்தப் பேட்டியில் பேசியதாவது, விடுதலை படத்தை விட மண்டாட்டி படம் இன்னும் சவாலானது. ஏனெனில், இதன் கதைக்களம் கடலைச் சார்ந்தது. இதில் நான் ஏற்றுள்ள முத்துக்காளை என்ற கதாபாத்திரம் ஒரு மீனவருடையது. மேலும், இப்படத்தில் படகுப் பந்தயக் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இதற்காகக் கடலில் நீந்தப் பயிற்சி மேற்கொண்டேன். அதேவேளையில், படப்பிடிப்பின்போது நான் ஒரு நடிகராகத் தெரியாமல் இயல்பாக இருக்க வேண்டும் என்பதிலும் கவனமாக இருந்தேன்.

தொடக்கத்தில், இரண்டு தொழில்முறை படகுப் பந்தய வீரர்களும் நான்கு நடிகர்களும் பங்கேற்கும் வகையிலேயே திட்டம் இருந்தது. ஆனால், ஒத்திகையின்போது நான் படகில் ஏறி கடலுக்குள் சென்றபோது, ​​கடல் அலைகளின் சீற்றமும் அதில் உள்ள அபாயங்களும் எவ்வளவு சவாலானவை என்பதை உணர்ந்தேன். எனவே, நான்கு வீரர்களும் இரண்டு நடிகர்களும் பங்கேற்கும் வகையில் மாற்றியமைக்குமாறு இயக்குநரிடம் கேட்டுக்கொண்டேன். இதற்காக, நீண்ட காலமாக இப்படத்தின் பயணத்தில் இணைந்திருந்த சில நடிகர்களைத் தவிர்க்கவோ அல்லது விலக்கவோ வேண்டிய சூழல் ஏற்பட்டது என்று தெரிவித்து இருந்தார்.

Also Read… எனக்கு மிகவும் பிடித்த காமெடி நடிகர் அவர்தான் – நடிகர் சூரி ஓபன் டாக்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… குஷி படத்தில் நடித்த இருவருமே இப்போ அரசியலில்.. கலகலப்பாக பேசிய எஸ்.ஜே.சூர்யா!

Follow Us