குஷி படத்தில் நடித்த இருவருமே இப்போ அரசியலில்.. கலகலப்பாக பேசிய எஸ்.ஜே.சூர்யா!
SJ Suryah About CM Vijay And Pawan Kalyan: தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகர் மற்றும் இயக்குநராக புகழ்பெற்றவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் தற்போது கார்த்தியின் சர்தார் 2 திரைப்படத்தில் மெயின் வில்லனாக நடித்துள்ளார். சமீபத்தில் நேர்காணலில் பேசிய எஸ்.ஜே.சூர்யா முதல்வர் விஜய் மற்றும் பவன் கல்யாண் குறித்து பேசியுள்ளார்.
கோலிவுட் சினிமாவில் நடிகராகவும் இயக்குநராகவும் கலக்கிவருபவர் எஸ்.ஜே.சூர்யா (SJ Suryah). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளியாகிவருகிறது. இவர் ஆரம்பத்தில் சினிமாவில் இயக்குநராக நுழைந்த நிலையில், முதல் படத்தையே தல அஜித் குமாரை (Thala Ajith Kumar) வைத்து இயக்கியிருந்தார். அந்த திரைப்படம்தான் வாலி (Vaalee). இந்த படமானது இவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்திருந்தது. மேலும் இதன் பிறகு தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) நடிப்பில் குஷி (Kushi) திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் விஜய் மற்றும் ஜோதிகா இணைந்து நடித்திருந்தனர். இதன் பின் தானம் ஹீரோவாக எஸ்.ஜே.சூர்யா அறிமுகமானார். இயக்குநராக நுழைந்து, பின் நடிகராகவும் அறிமுகமான நிலையில், கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கும் மேல் நடிகராகவே படங்களில் பணியாற்றிவருகிறார்.
இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக, பிரதீப் ரங்கநாதனின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (Love Insurance Kompany) என்ற படமானது வெளியாகியிருந்தது. மேலும் இப்படத்திற்கு பின், இவரின் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம்தான் சர்தார் 2 (Sardar 2). இந்த படத்தில் மெயின் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார். மேலும் தெலுங்கு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய எஸ்.ஜே.சூர்யா, தனது இயக்கத்தில் குஷி படத்தில் நடித்த இரு நடிகர்களும் அரசியலில் இருப்பது குறித்து கலகலப்பாக பேசியுள்ளார்.




இதையும் படிங்க: பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் முதல் வார கேப்டன் யார்? வைரலாகும் வீடியோ!
முதல்வர் விஜய் மற்றும் தெலுங்கானா துணை முதல்வர் பவன் கல்யாண் பற்றி எஸ்.ஜே.சூர்யா:
அந்த தெலுங்கு நேர்காணலில் பேசிய எஸ்.ஜே.சூர்யா, “நான் குஷி படத்தில் நடித்த இருவரில், ஒருவர் துணை முதல்வர் ஆனார் (பவன் கல்யாண்), மற்றொருவர் முதல்வர் ஆனார் (தளபதி விஜய்)” என அதில் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: 3 ஆண்டுகளை நிறைவு செய்தது ஷாருக்கானின் ஜவான் படம்… பார்ட் 2 கேட்கும் ரசிகர்கள்!
முதல்வர் விஜய் மற்றும் பவன் கல்யாண் குறித்து எஸ்.ஜே.சூர்யா பேசியது தொடர்பாக இணையத்தில் வைரலாகும் பதிவு:
#SjSuryah: Two People I did #Kushi with, One became a Deputy CM (#PawanKalyan) and another one became a CM (#ThalapathyVijay..😄#Karthi: What a Connection..😃👏 pic.twitter.com/YmCD70i6NJ
— Laxmi Kanth (@iammoviebuff007) September 6, 2026
நடிகர் கார்த்தி மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் காம்போவில் உருவாகியுள்ள புதிய திரைப்படம்தான் சர்தார் 2. இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ள நிலையில், சிறப்பான திரைப்படமாக தயாராகியுள்ளது. இந்த படமானது மெடிக்கல் மாஃபியா கதையில் உருவாகியிருக்கும் நிலையில், மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.