AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

SJ Suryah: அந்த ரெண்டு காட்சிகள் LIK படத்தோட ஹைலைட்டாக இருக்கும் – எஸ்.ஜே.சூர்யா பேச்சு!

SJ Suryah About LIK Movie Highlights: இயக்குநராகவும், தற்போது நடிகராகவும் படங்களில் பிசியாக இருந்துவருபவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியிருந்த நிலையில், அதில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ஹைலைட் காட்சி குறித்து ஓபனாக பேசியுள்ளார். அதுகுறித்து விவரமாக பார்க்கலாம்.

SJ Suryah: அந்த ரெண்டு காட்சிகள் LIK படத்தோட ஹைலைட்டாக இருக்கும் – எஸ்.ஜே.சூர்யா பேச்சு!
LIK திரைப்படம் பற்றி எஸ்.ஜே. சூர்யா Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 09 Apr 2026 16:54 PM IST

நடிகர் எஸ்.ஜே. சூர்யா (SJ. Suryah) தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் லீட் கதாநாயகனாகவும் முக்கிய வேடங்களிலும் படங்களில் நடித்துவருகிறார். ஆரம்பத்தில் இயக்குநராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய இவர், தற்போது படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துவருகிறார். அந்த வகையில் தமிழில் இயக்குநர் விக்னேஷ் சிவன் (Vignesh Shivan) இயக்கத்தில், வில்லனாக நடித்திருக்கும் படம்தான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (Love Insurance Kompany). இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganthan) லீட் கதாநாயகனாக நடிக்க, எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடித்துள்ளார். இந்த படத்தில் இவர்களுடன் நடிகைகள் கிரித்தி ஷெட்டி, கௌரி ஜி கிஷன் போன்ற நடிகைகளும் இணைந்து நடித்துள்ளனர். இப்படமானது முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்தில், தயாராகியுள்ள நிலையில் 2026 ஏப்ரல் 10ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாக காத்திருக்கிறது.

அந்த வகையில் இப்படத்தின் புரோமோஷன் பணிகளானது தீவிரமாக நடைபெற்றுவந்தது. அந்த வகையில் சமீபத்தில் செய்தியளர்கள் சந்திப்பில் பேசிய எஸ்.ஜே. சூர்யா, அதில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் ஹைலைட் காட்சிகள் குறித்து பேசியுள்ளார்.

இதையும் படிங்க: பிரதீப் ரங்கநாதனின் LIK படத்திலிருந்து வெளியானது ‘வைப் வாஸே’ பாடல்!

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் குறித்து எஸ்.ஜே.சூர்யா பேசிய விஷயம்:

அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய எஸ்.ஜே. சூர்யா, “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் எனக்கும், பிரதீப் ரங்கநாதனுக்கு நேருக்கு நேரான கடைசி ஒன்று இருக்கும். அந்த காட்சி ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கும், மக்கள் நிச்சயமாக ரசிப்பார்கள். அதன்பிறகு, ஒரு இடத்தில் பிரதீப் ரங்கநாதனை எனது வழிக்கு கொண்டுவரும் விதத்தில் போராடி பேசியிருப்பேன். அந்த காட்சியும் சுவாரஸ்யமாக இருக்கும்.

இதையும் படிங்க: AK 64 படத்தின் தயாரிப்பாளர் இவரா? அஜித் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்

இந்த இரு காட்சிகளும் படத்தில் ஹைலைட் காட்சிகளாக இருக்கும் என கூறினார். அதனைத் தொடர்ந்து பேசிய பிரதீப் ரங்கநாதன், எனக்கும் எஸ்.ஜே.சூர்யா சாருக்கும் நேருக்கு நேர் இருக்கும், காட்சியின்போதுதான் எனக்கு கேமராவை பார்த்து எவ்வாறு நடிக்கவேண்டும் என அவர் சொல்லி கொடுத்தார். அதை எப்போதும் நான் மறக்கமாட்டேன்” என அதில் அவர் தெரிவித்திருந்தார்.

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:

இந்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படமானது 2040ம் ஆண்டு, அதாவது எதிர்காலத்தில் நடக்கும் காதல் கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ளது. இதை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்க, பிரம்மாண்டமாக தயாராகியுள்ளது. இப்படம் நாளை 2026 ஏப்ரல் 10ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகின்ற நிலையில், நிச்சயம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us