AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பிரதீப் ரங்கநாதன் எனக்காக அந்த விசயத்தை செய்தார் – விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சிப் பேச்சு

Director Vighnesh Shivan Talks About Pradeep Ranganathan: தமிழ் சினிமாவில் சுமார் இரண்டு ஆண்டுகளாக காத்திருந்து தற்போது வெளியீட்டு தேதியை இறுதி செய்துள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் விழாவில் பிரதீப் ரங்கநாதன் குறித்து விக்னேஷ் சிவன் பேசியது வைரலாகி வருகின்றது.

பிரதீப் ரங்கநாதன் எனக்காக அந்த விசயத்தை செய்தார் – விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சிப் பேச்சு
பிரதீப் ரங்கநாதன் - விக்னேஷ் சிவன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 09 Apr 2026 11:20 AM IST

தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே பிரபல இயக்குநராக வலம் வருகிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன். இவரது இயக்கத்தில் முன்னதாக திரையரங்குகளில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதி இயக்கி திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இந்தப் படத்தின் பேச்சுவார்த்தை கடந்த 2018-ம் ஆண்டே தொடங்கியது. ஆரம்பத்தில் இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனை நடிக்க வைக்க பேசப்பட்டது. அதனைத் தொடர்ந்து தயாரிப்பு நிறுவனமான லைகா இந்தப் படத்தை தயாரிப்பதில் இருந்து விலகியது. தொடர்ந்து இந்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் பணிகள் ஏதேனும் ஒரு காரணத்திற்காக ஒத்தி வைக்கப்பட்டுக்கொண்டே இருந்தது.

இப்படி இருக்கும் சூழலில் இந்தப் படத்தை ரௌடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்க நடிகரும் இயக்குநருமான பிரதீப் ரங்கநாதன் நடிக்க ஒப்பந்தம் ஆனார். சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைப்பெற்று வந்த நிலையில் இறுதியாக நாளை 10-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் நடிகர் பிரதீப் ரங்கநாதன் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

எனக்கா அந்த வாய்ப்பை விட்டுகொடுத்தார் பிரதீப் ரங்கநாதன்:

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம் தாமதமானபோது, ​​ஒரு படத்தை இயக்கும் மிகச்சிறந்த வாய்ப்பு பிரதீப் ரங்கநாதனுக்குக் கிடைத்தது. ஆனால் எனக்காக அவர் அந்த வாய்ப்பைத் தியாகம் செய்தார். லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் இடைவேளைக் காட்சிதான் அப்படத்தின் மிக முக்கியமான, உணர்வுபூர்வமான காட்சியாக அமைந்திருந்தது. டெல்லியில் அந்த இடைவேளைக் காட்சியைப் படமாக்கிக்கொண்டிருந்தபோது, ​​படப்பிடிப்புத் தளத்தில் பெரும் குழப்பமும் சிக்கல்களும் ஏற்பட்டன. அந்தச் சூழலில் வேறு எந்த நடிகராக இருந்தாலும், அவர்களால் அந்தக் காட்சியில் நடித்து முடித்திருக்க முடியாது. ஆனால், அத்தகைய இக்கட்டான சூழலிலும் பிரதீப் அந்தக் காட்சியை மிகச் சிறப்பாக நடித்துக் கொடுத்தார். அவர் ஒரு அபாரத் திறமை வாய்ந்த நடிகர் என்று விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

Also Read… வெளியானது அல்லு அர்ஜூனின் 22-வது படத்தின் டைட்டில் போஸ்டர்

இணையத்தில் வைரலாகும் விக்னேஷ் சிவன் பேச்சு:

Also Read… கருப்பு படத்தின் அடுத்த சிங்கிள் ரிலீஸ் எப்போது? அப்டேட் கொடுத்த ஆர்.ஜே.பாலாஜி

Follow Us