AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விக்னேஷ் சிவன் – நயன்தாரா காதல் தெரிந்தபோது பொறாமையாக இருந்தது – ஆர்.ஜே.பாலாஜி

Rj Balaji talks about Vignesh Shivan and Nayanthara Love Relationship : இன்று லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் விழாவில் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு பேசினர். அதில் ஆர்.ஜே. பாலாஜி விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் காதல் கதை பற்றி பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

விக்னேஷ் சிவன் – நயன்தாரா காதல் தெரிந்தபோது பொறாமையாக இருந்தது – ஆர்.ஜே.பாலாஜி
விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவுடன் ஆர்.ஜே.பாலாஜிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 07 Apr 2026 21:45 PM IST

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்து தற்போது இயக்குநர் மற்றும் நாயகனாக வலம் வருகிறார் ஆர்.ஜே.பாலாஜி. சினிமாவில் நடிக்கத் தொடங்கிய காலக்கட்டத்தில் இவர் நடிக்கும் காமெடி கதாப்பாத்திரங்கள் ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வந்தது. இதனைத் தொடர்ந்து அவர் படங்களில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். இவர் நாயகனாக தொடக்க காலத்தில் நடித்தப் படங்களும் சட்டையர் படக்களாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து ஃபேமிலி செண்டிமெண்ட் காமெடியை மையமாக வைத்து நடித்து வந்தர். பிறகு ஆர்.ஜே.பாலாஜி படங்களை இயக்கி நாயகனாக நடித்து வந்தார். இவர் நடிப்பில் வெளியான படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது போல இயக்கத்தில் வெளியான படங்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவர் தற்போது நடிகர் சூர்யாவின் கருப்பு படத்தை இயக்கி உள்ளார்.

இந்தப் படத்தின் பணிகள் முடிவடைந்து தற்போது வெளியீட்டிற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. அதன்படி இந்த கருப்பு படம் வருகின்ற மே மாதம் 14-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் லவ் இன்சூரன்ஸ் படத்தின் விழாவில் கலந்துகொண்டு இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

விக்னேஷ் சிவன் – நயன்தாரா காதல் தெரிந்தபோது பொறாமையாக இருந்தது:

விக்னேஷ் சிவன் மிகவும் அதிர்ஷ்டசாலி. நயன்தாரா அவர் மீது மிகுந்த காதல் கொண்டிருக்கிறார். ‘நானும் ரவுடி தான்’ படப்பிடிப்பின்போது, ​​இதை நேரில் கண்டவன் நானே. விக்னேஷ் சிவன் முதன்முதலில் என்னிடம் வந்து, தான் நயன்தாராவை காதலிப்பதாகக் கூறியபோது, ​​என்னால் அதை நம்பவே முடியவில்லை. அப்போது அவர் மீது எனக்குச் சற்று கோபமும் பொறாமையும் கூட ஏற்பட்டது. அதன் பிறகு, நயன்தாராவிடமே இதை நான் உறுதிப்படுத்திக்கொண்டேன். அவர்கள் இன்றும் அதே அன்பைப் பகிர்ந்துகொள்வதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.

Also Read… Kara Movie: தனுஷின் ‘கர’ படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? – அப்டேட் இதோ!

இணையத்தில் வைரலாகும் ஆர்.ஜே.பாலாஜி பேச்சு:

Also Read… தளபதி விஜயின் அந்தப் படத்தை நிறையமுறை பார்த்து இருக்கேன் – நடிகர் டொவினோ தாமஸ்

Follow Us