தளபதி விஜயின் அந்தப் படத்தை நிறையமுறை பார்த்து இருக்கேன் – நடிகர் டொவினோ தாமஸ்
Malayalam Actor Tovino Thaomas talks about Thalapathy Vijay movie : தமிழ் சினிமாவில் நடிகர் தளபதி விஜய்க்கு மக்கள் மத்தியில் எந்த அளவிற்கு வரவேற்பு இருக்கிறதோ அதற்கு சற்றும் குறையாமல் மலையாள சினிமாவிலும் ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரள மக்கள் மத்தியில் மலையாள சினிமா நடிகர்களுக்கு எந்த அளவிற்கு வரவேற்பு இருக்கிறதோ. அதோ போல தென்னிந்திய சினிமாவில் உள்ள குறிப்பிட்ட சில நடிகர்களுக்கு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளனர். அந்த வரிசையில் நடிகர் தளபதி விஜய் முதலிடத்தில் இருக்கிறார். இவருக்கு தமிழ் சினிமாவில் எப்படி ரசிகர்களிடையே வரவேற்பு இருக்கிறதோ அதற்கு சற்றும் குறையாமல் மலையாள சினிமாவில் ரசிகர்கள் உள்ளனர். அதன் காரணமாகவே தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகும் படங்கள் தமிழில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெறுவது போல மலையாள சினிமாவிலும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இது பொது மக்களுக்கு மட்டும் இல்லை பல திரையுலக பிரபலங்களும் தங்களுக்கு நடிகர் விஜய் தான் பிடிக்கும் என்பதை வெளிப்படையாக தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் மலையால சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் டொவினோ தாமஸ். இவரது நடிப்பில் அடுத்ததாக பள்ளிச்சட்டம்பி என்ற படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படம் வருகின்ற 10-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் விழா ஒன்றில் பங்கேற்ற நடிகர் டொவினோ தாமஸ் தனக்கு பிடித்த தளபதி விஜயின் படம் என்ன என்பது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.




தளபதி விஜயின் போக்கிரி படத்தை நிறையமுறை பார்த்து இருக்கேன்:
அதன்படி பேசிய டொவினோ தாமஸ் நடிகர் தளபதி விஜயின் போக்கிரி படத்தை நிறைய தடவ பாத்து இருக்கேன். அப்பறம் தளபதி விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் படத்தின் ஷூட்டிங்கில் அவரை நேரில் சந்தித்தேன் என்று டொவினோ தாமஸ் தெரிவித்துள்ளார். இதில் போக்கிரி படத்தில் நடிகர் விஜய் காவல்துறை அதிகாரியாக நடித்து இருந்த நிலையில் சர்க்கார் படத்தில் கார்ப்பரேட் பிசினஸ் மேனாக இருப்பார். இந்த நிலையில் டொவினோ தாமஸ் பேசியது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… Krithi Shetty: நான் CM- ஆனால் நிச்சயம் அந்த தண்டனையை கடுமையாக்குவேன் – கிரித்தி ஷெட்டி
இணையத்தில் வைரலாகும் டொவினோ தாமஸின் பேச்சு:
𝗟𝗔𝗧𝗘𝗦𝗧 🔔 : Malayalam Actor @Ttovino (Minnal Murali) About VIJAY Naa. 🔥😍
• #Pokkiri படம் நிறைய தடவ பாத்து இருக்கேன்
• #Sarkar Shooting Spot -la விஜய் Sir -ர Meet பண்ணேன் pic.twitter.com/2WeNwkGWST
— Prakash Vijay (@PrakazVijay_Of) April 1, 2026