AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Mysskin: லோகேஷ் கனகராஜுடன் படம் பண்ணபோறேன் – மிஷ்கின் ஓபன் டாக்!

Director Mysskin About Lokesh Kanagaraj: தென்னிந்திய மக்கள் மத்தியில் ஒரு இயக்குநராகவும், நடிகராகவும் மிகவும் புகழ் பெற்றிருப்பவர் மிஷ்கின். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருந்த இவர், இயக்குநரும், நடிகருமான லோகேஷ் கனகராஜுடன் படத்தில் இணைவது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அது பற்றி விவரமாக பார்க்கலாம்.

Mysskin: லோகேஷ் கனகராஜுடன் படம் பண்ணபோறேன் – மிஷ்கின் ஓபன் டாக்!
மிஷ்கின் மற்றும் லோகேஷ் கனகராஜ்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 24 Nov 2026 12:17 PM IST

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனது திரைக்கதைகள் மற்றும் தனது இயக்கத்தின் மூலமாக மிகவும் பிரபலமானவர் மிஷ்கின் (Director Mysskin). இவரின் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் இரு படங்கள் உருவாக்கி இன்னும் அது வெளியாகாமல் உள்ளது. இவரின் இயக்கத்திலும், விஜய் சேதுபதியின் (Vijay Sethupathi) நடிப்பிலும் உருவாகியிருந்த திரைப்படம்தான் ட்ரெயின் (Train Movie). இதை அரசன் பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரித்திருந்தார். இந்த படமானது ஒரு வித்தியாசமான திரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், 2026 டிசம்பர் 4ம் தேதியில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

ஆனால் இன்னும் அது குறித்து ட்ரெய்லர் மற்றும் அப்டேட்டுகள் குறித்து எந்த தகவலும் இல்லை. இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர் மிஷ்கின் கலந்து கொண்டார். அதில் அவர், லோகேஷ் கனகராஜுடன் (Lokesh Kanagaraj) திரைப்படத்தில் இணைவது குறித்து பேசியுள்ளார்.

இதையும் படிங்க: வட சென்னை படம்தான் எனது பெரிய இன்வெஸ்ட்மென்ட் – வெற்றிமாறன் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

லோகேஷ் கனகராஜுடன் படத்தில் இணைவது பற்றி பேசிய மிஷ்கின்:

அந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர், சார் நீங்கள் அஞ்சாதே 2 எடுக்க போகிறீர்களா?, அதை லோகேஷ் கனகராஜ் தயாரிக்கிறாராமே? அது உண்மையா? என கேட்டிருந்தார். உடனே மிஷ்கின், “லோகேஷ் கனகராஜை வைத்து படம் பண்ணுகிறேன். இதை அவரிடமே சொல்லிவிட்டேன். ஏன் அவரை வைத்து படம் பண்ணுகிறேன் என்றால், டிசி படத்தின் வெற்றிக்கு பிறகு அவரை நன் எனது அலுவலகத்தில் சந்தித்தேன். அப்போது லோகேஷ் என்னிடம், “சார் நீங்கள் நரேன்னை வைத்து அஞ்சாதே பார்ட் 2 எடுங்க சார். அதை நான் தயாரிக்கிறேன், சார் அது நல்ல படம், அஞ்சாதே தான் எனது வாழ்க்கையில் இன்ஸ்பிரேஷன் படம் என என்னிடம் சொன்னாரு”.

இதையும் படிங்க: சூர்யாவின் சீன் படத்திலிருந்து வெளியானது காத்து வீசும் தேசம் வீடியோ பாடல்!

நான் உடனே, “அவரிடம் ராஸ்கல் நான் உன்னை வைத்து திரைப்படம் எடுக்கலாம் என இருக்கிறேன்” என சொன்னேன். லோகேஷ் கனகராஜ் நிஜ வாழ்க்கையிலே உண்மையான ஹீரோ, பலரும் ரூ 50 சினிமாவில் போட்டால் ரூ 100 ஆக எடுக்கணும் என நினைக்கிறார்கள். ஆனால் லோகேஷ் ரூ 100 போடவேண்டும் அதை எடுக்கவேண்டும் என நினைப்பவர் இல்லை” என அதில் அவர் கூறியிருந்தார்.

மிஷ்கின் நடித்த சத்யவான் சாவித்ரி படம் குறித்த எக்ஸ் பதிவு:

அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ் விஜய் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் இணைந்து நடித்திருந்த படம்தான் சத்யவான் சாவித்ரி. இப்படம் 2026 நவம்பர் 20ம் தேதியில் உலகமெங்கும் வெளியான நிலையில், சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. மேலும் இப்படத்திற்கு திரையரங்குகளில் மக்களிடையே பாசிட்டிவ் விமர்சனங்களே இருந்துவருகிறது. இதில் இயக்குநர் மற்றும் நடிகர் மிஷ்கின் நெகடிவ் வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us