பிக் பாஸில் முதல் ஆளாக வந்த வினோத் பாபு பேமிலி – மனைவி கொடுத்த அட்வைஸ்!
BB Tamil 10 Family Week: தமிழில் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது ஆரம்பமாகி, தற்போது இறுதிக்கட்டத்தையே எட்டிவிட்டது. இன்னும் இந்த நிகழ்ச்சியானது நிறைவடைய 3 வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், போட்டியாளர்களை, அவர் அவர் குடும்பத்தினர்கள் இந்த வாரத்தில் சந்திக்கிறார்கள். இது தொடர்பான ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.
விஜய் டிவியில் (Vijay Tv) கடந்த 2026 செப்டம்பர் 6ம் தேதி முதல் தொடங்கியிருந்த பிரம்மாண்டமான ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருந்துவருவதுதான் பிக் பாஸ் சீசன் 10 தமிழ் (Bigg Boss Season 10). இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுப்பாளராக இருந்து தொகுத்துவரும் நிலையில், சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சியானது 11வது வாரத்தை கடந்து தற்போது 12வது வாரத்தில் உள்ளது. இன்னும் இந்த நிகழ்ச்சியானது நிறைவடைவதற்கு சில வாரங்கள் மட்டுமே இருக்கிறது. அதை முன்னிட்டு, இந்த வாரம் முழுக்க பேமிலி வீக்காக ( BB Family Week) நடைபெறவுள்ளது. போட்டியாளர்கள் தங்களின் குடும்பத்தினர்களை சந்திக்கும் வாரமாக இந்த வாரம் உள்ளது.
இந்நிலையில் இந்த வாரத்தில் முதல் குடும்பமாக வினோத் பாபுவின் குடும்பம் இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளனர். இது தொடர்பான ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவந்தது. மேலும் வினோத் பாபுவின் மனைவி அவருக்கு அட்வைஸ் கொடுத்திருக்கிறார்.




இதையும் படிங்க: சூர்யாவின் சீன் படத்திலிருந்து வெளியானது காத்து வீசும் தேசம் வீடியோ பாடல்!
வினோத் பாபுவை சந்தித்த அவரது குடும்பம் மற்றும் மனைவி சொன்ன அட்வைஸ்:
இந்த ப்ரோமோவில் வினோத் பாபுவின் குடும்பமாக அவரது அம்மா, மனைவி மற்றும் மகன் போன்றவர்கள் உள்ளே நுழைவதுபோல காட்டப்பட்டுள்ளது. மேலும் அவரின் மனைவி வினோத் பாபுவுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க: ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்கும் ஆர்யவின் ஹெலோ காதல் படத்தின் ட்ரெய்லர்
அதில் வினோத்தின் மனைவி அவரிடம், “எமோஷனலாக இல்லாமல் இதை ஒரு கேமாக பாருங்க. இந்த கேமில் இப்படித்தான் ஹெர்ட் பண்ணுவாங்க.. இப்படித்தான் ட்ரிகெர் பண்ணுவாங்க.. இப்படித்த குற்றவாளியாக அக்யூஸ்ட் பண்ணுவாங்க. இதுதானா இந்த கேமின் நேர்ச்சர். இதையெல்லாம் தாண்டி ஓன்று இருக்கிறது அல்லவா.. அதை நீ டார்கெட் செய்தால்.. சக போட்டியாளர்களின் வார்த்தைகளுக்கெல்லாம் நீ விழவே மாட்ட” என அதில் அவருக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார். இது தொடர்பான ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 79வது நாளின் முதல் ப்ரோமோ குறித்த எக்ஸ் பதிவு:
#Day79 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision https://t.co/BxUFaDVjik
— Vijay Television (@vijaytelevision) November 24, 2026
இந்த நிகழ்ச்சியானது நிறைவடைவதற்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்போது டிடிஃஎப் வாசன், தன்யா பல்லத், ஜேசன், வினோத் பாபு, லக்ஷ்மி பிரியா, முனியம்மாள், பிருத்வி மற்றும் அன்சர் போன்ற 8 போட்டியாளர்கள் மட்டுமே மீதம் இருகிறார்கள். அந்த விதத்தில் இந்த நிகழ்ச்சியின் மீது அதீத எதிர்பார்ப்பு இருக்கிறது. கடந்த 3 வாரங்களாக டபுள் எவிக்ஷன் இருந்த நிலையில், இந்த வாரத்திலும் டபுள் எவிக்ஷன் இருக்கும் என கூறப்படுகிறது.