AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

‘ஆட்சியர் புகார் – தவெக எம்எல்ஏவை கைது செய்க’ – மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

MK Stalin Demands MLA’s Arrest : கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் அந்த மாவட்ட கலெக்டர் புகார் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷை கைது செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

‘ஆட்சியர் புகார் – தவெக எம்எல்ஏவை கைது செய்க’  – மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் - மு.க.ஸ்டாலின்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 24 Nov 2026 09:52 AM IST

சென்னை, நவம்பர் 24 : மாவட்ட ஆட்சியர் புகார் அளித்திருப்பதாக தகவல் வெளியான நிலையில் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷை கைது செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் அந்த மாவட்ட கலெக்டர் புகார் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த மு.க.ஸ்டாலின் (MK Stalin), தவறிழைத்த சட்டமன்ற உறுப்பினரைக் கண்டித்து, சட்டநடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தவெக மீது மு.க.ஸ்டாலின் கண்டனம்

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், ஆளுங்கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏவின் ஒழுங்கீனமான செயல் குறித்து மாவட்ட ஆட்சியர் முறையாகப் புகார் அளித்திருக்கும் செய்தி வெளியாகியிருக்கிறது. இத்தகைய ஒரு சம்பவம் நடைபெற்றதாக பல வாரங்களுக்கு முன்பு செய்திகள் வெளிவரத் தொடங்கியபோதே, முதலமைச்சரும் தலைமைச் செயலாளரும் மாவட்ட ஆட்சியரை அழைத்துப் பேசி இருக்க வேண்டும். அவருக்கு உறுதுணையாக அரசு இருக்கும் என்ற நம்பிக்கையை அளித்திருக்க வேண்டும்.

இதையும் படிக்க : கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மீது எஸ்பி அலுவலகத்தில் கலெக்டர் புகார் – வெளியான பரபரப்பு தகவல்

தவறிழைத்த சட்டமன்ற உறுப்பினரைக் கண்டித்து, சட்டநடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். பெண்களின் பாதுகாப்பிற்கும், ஆட்சி மாண்பிற்கும் முக்கியத்துவம் அளிக்கும் எந்த ஒரு அரசும் இதைத்தான் செய்திருக்கும். ஆனால், தன் கட்சி சட்டமன்ற உறுப்பினரையும் தன் மைனாரிட்டி அரசையும் காப்பாற்றினால் போதும் என்ற நோக்கத்தில் இவர்கள் இந்த சம்பவத்தை மறைக்க அனைத்து வகைகளிலும் முயற்சித்ததால்தான், பாதிக்கப்பட்ட பெண் அலுவலர் முறையாகப் புகார் அளிக்கவே இத்தனை நாட்கள் ஆகியிருக்கின்றன.

ஒரு மாவட்ட ஆட்சியருக்கே இந்த நிலைமை என்றால் தமிழ்நாட்டில் வாழும் சராசரிப் பெண்களின் நிலை எப்படி இருக்கும் என்ற கேள்வி கவலை அளிக்கிறது. இதில், பதவிக்கு மாரடிக்கும் சில கட்சித் தலைவர்கள் பாதிக்கப்பட்டவரின் பக்கம் நிற்காமல், MLA பாவம் என்று முட்டு கொடுத்தது கேவலத்தின் உச்சம்.

பல்வேறு வகைகளிலும் இந்த சம்பவம் அரசின் கவனத்திற்கு வந்த பிறகும், இந்த அரசு நடவடிக்கை எடுக்காமல் நீதிமன்றத்திலும் பொய் சொல்கிறார்கள் என்பது கடும் கண்டனத்துக்குரியது. பாலியல் குற்றங்களிலும், போதைப் பொருள் கடத்தலிலும், கொள்ளைச் சம்பவங்களிலும் த.வெ.க.வினர்தான் அதிகம் ஈடுபடுகிறார்கள் என நாங்கள் தொடர்ந்து சொல்லி வருவது ஒவ்வொரு நாளும் உண்மையாகி வருகிறது. இனியும் தாமதிக்காமல், கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரைக் கைது செய்து விசாரிக்க வேண்டும் என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க : “திருவண்ணாமலையில் அதிகாலையில் ஒளிர்ந்த பரணி தீபம்!”.. விண்ணை முட்டிய அரோகரா முழக்கம்!!

முன்னதாக தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி அதிமுக வழக்கறிஞர் திரிசூலி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இதற்கு பதிலளித்த தமிழக காவல்துறை, இந்த விவகாரம் தொடர்பாக தங்களிடம் எந்தப் புகாரும் வரவில்லை என  சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Follow Us