Tamil Nadu Rains: கார்த்திகை தீப திருநாளில் 9 மாவட்டங்களில் கனமழை கொட்டப்போகுது- எங்கெல்லாம் தெரியுமா?
Tamil Nadu Weather Alert: கார்த்திகை தீப திருநாளான நவம்பர் 24, 2026 இன்று 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வருகிற நவம்பர் 27, 2026 வரை பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, நவம்பர் 24 : தமிழகத்தில் நவம்பர் 24, 2026 கார்த்திகை தீபம் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மக்கள் தங்கள் வீடுகளில் விளக்கேற்றி கடவுளை வழிபடுவது வழக்கம். உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மலையில் மகாத தீபம் ஏற்றி வழிபாடு நடத்தப்படும். இதனை காண தமிழகம் மட்டும் இல்லாமல் நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இந்த நிலையில் தமிழ்நாட்டில் நவம்பர் 24, 2026 இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழை (Heavy Rain Alert) எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
கார்த்திகை தீப திருநாளில் 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் உயரத்தில் தென்மேற்கு வங்கக்கடலிலிருந்து மத்தியமேற்கு வங்கக்கடல் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுவதாகவும், வடக்கு கேரளாவிலிலிருந்து கர்நாடகா வரை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் சுமார் 0.9 கி மீ உயரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுவதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க : திருப்பரங்குன்றம் சர்ச்சைக்குரிய கல்தூண் நில அளவீட்டுத் தூண்தான்! உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்..




இதன் காரணமாக நவம்பர் 24, 2026 கார்த்திகை தீப திருநாளான இன்று கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
மேலும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன்மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து நவம்பர் 25, 2026 நாளை தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதியிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : சூளைமேட்டில் ஹெராயின் விற்பனை: 4 பேர் கைது! 5 செல்போன்கள் உட்பட போதைப்பொருட்கள் பறிமுதல்
மேலும் நவம்பர் 26, 2026 அன்று திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்றும் நவம்பர் 27, 2026 வெள்ளிக்கிழமை நீலகிரி மாவட்டம், கோயம்புத்தூர் மற்றும் தேனி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை நிலவரம்
சென்னையைப் பொறுத்தவரை நவம்பர் 24 2026 இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30 முதல் 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 முதல் 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.