சூளைமேட்டில் ஹெராயின் விற்பனை: 4 பேர் கைது! 5 செல்போன்கள் உட்பட போதைப்பொருட்கள் பறிமுதல்
Chennai Crime: சென்னை சூளைமேட்டில் ஹெராயின் விற்பனையில் ஈடுபட்டதாக ஏற்கெனவே 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் அளித்த தகவலின் பேரில் மேலும் 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 5 கிராம் ஹெராயின், ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
நவமபர் 23, 2026: சென்னை சூளைமேட்டில் ஹெராயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக ஏற்கெனவே 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் மேலும் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ஹெராயின் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் சோதனை
சென்னை சூளைமேடு பகுதியில் ஹெராயின் போதைப்பொருள் விற்பனை நடைபெறுவதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் நேற்று சூளைமேடு பாரி தெருவில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிந்த வடமாநில இளைஞரைப் பிடித்து சோதனை செய்தபோது, அவரிடம் அரை கிராம் ஹெராயின் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் அவர் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த நிஹால் தபா (26) என்பதும், கீழ்ப்பாக்கத்தில் தங்கி பிரபல சலூன் கடையில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.
மேலும் படிக்க: கூட்டணி கட்சிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை.. அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு, இடைத்தேர்தல் குறித்து விவாதம்..
முதல் கட்டமாக 4 பேர் கைது
நிஹால் தபா அளித்த தகவலின் அடிப்படையில், வடபழனியில் தனியார் ஓட்டலில் சமையல் கலைஞராகப் பணியாற்றி வந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அம்ரித் பிரதான் (29), சாலிகிராமத்தில் தேநீர் கடையில் வேலை பார்த்து வந்த பீகாரைச் சேர்ந்த சர்வகுமார் (20), பல்லாவரத்தில் உள்ள ஓட்டலில் கார் ஓட்டுநராகப் பணியாற்றி வந்த நேபாளத்தைச் சேர்ந்த ராகேஷ் தமங் திங் (29) உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 85 கிராம் ஹெராயின், 50 கிராம் கஞ்சா, ரூ.85 ஆயிரம் ரொக்கம் மற்றும் 50 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் நான்கு பேரும் சூளைமேடு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் படிக்க: திருப்பரங்குன்றம் RED ZONE ஆக அறிவிப்பு! மலை மற்றும் சுற்றுவட்டாரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு..
இதற்கிடையே, கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் போலீசார் மேலும் நான்கு பேரைக் கைது செய்துள்ளனர். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அன்மோல் தாம் (43), நேபாளத்தைச் சேர்ந்த ஷால் என்ற மன்ராஜ் (35), சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த சவான் குரங் (23), டார்ஜிலிங் பகுதியைச் சேர்ந்த ராகுல் பிரதாப் (23) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹெராயின் மற்றும் செல்போன் பறிமுதல்
இவர்களிடமிருந்து 5 கிராம் ஹெராயின் மற்றும் ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூளைமேடு பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக அடுத்தடுத்து 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கும்பலின் பின்னணியில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா, போதைப்பொருள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது, யாருக்கெல்லாம் விற்பனை செய்யப்பட்டது என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.