AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IND A vs PAK A: இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் கைகுலுக்காத சர்ச்சை.. முதல் முறையாக தலையிட்ட எம்சிசி!

Ind-Pak Cricket No Handshake: நேற்று அதாவது 2026 நவம்பர் 22ம் தேதி நடைபெற்ற ரைசிங் ஸ்டார்ஸ் ஆசியக் கோப்பைத் தொடரின் இந்தியா 'ஏ' மற்றும் பாகிஸ்தான் 'ஏ' அணிகளுக்கு இடையேயான போட்டியின்போதும் நிகழ்ந்தது. அப்போது, ​​டாஸின்போது கேப்டன் திலக் வர்மா, பாகிஸ்தான் கேப்டன் அப்துல் சமதுடன் கைகுலுக்க மறுத்துவிட்டார்.

IND A vs PAK A: இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் கைகுலுக்காத சர்ச்சை.. முதல் முறையாக தலையிட்ட எம்சிசி!
இந்தியா - பாகிஸ்தான் டாஸ்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 23 Nov 2026 19:04 PM IST

இந்திய கிரிக்கெட் அணி (Indian Cricket Team) தொடர்ந்து ஐசிசி (ICC) மற்றும் ஏசிசி நடத்தும் போட்டிகளில் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்குவதைத் தவிர்த்து வருகிறது. இதேபோன்ற ஒரு சம்பவம், நேற்று அதாவது 2026 நவம்பர் 22ம் தேதி நடைபெற்ற ரைசிங் ஸ்டார்ஸ் ஆசியக் கோப்பைத் தொடரின் இந்தியா ‘ஏ’ மற்றும் பாகிஸ்தான் ‘ஏ’ அணிகளுக்கு இடையேயான போட்டியின்போதும் நிகழ்ந்தது. அப்போது, ​​டாஸின்போது கேப்டன் திலக் வர்மா, பாகிஸ்தான் கேப்டன் அப்துல் சமதுடன் கைகுலுக்க மறுத்துவிட்டார். இருப்பினும், இந்த போட்டியில் இந்தியா ஏ அணி, பாகிஸ்தான் ஏ அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்தது. தற்போது, ​​இந்திய அணியின் கைகுலுக்காத கொள்கைக்கு மேரிலேபோன் கிரிக்கெட் கிளப்பின் (MCC) இயக்குநர் ஃபிரேசர் ஸ்டீவர்ட் பதிலளித்துள்ளார்.

ALSO READ: திலக் வர்மாவின் போராட்டம் வீண் – இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் ஏ அணி அபார வெற்றி

எம்சிசி முதல் முறையாக பதில்:


இந்தியா – பாகிஸ்தான் இடையிலான கைகுலுக்காத விவகாரம் குறித்து பேசிய எம்.சி.சி கிரிக்கெட் தலைவர் ஃபிரேசர் ஸ்டீவர்ட் கூறுகையில், “கிரிக்கெட் விளையாட்டுக்கு அப்பாற்பட்ட சில சம்பவங்கள் நடக்கின்றன. இவை என் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட விஷயங்கள் என்பதால், இவ்விஷயங்கள் குறித்து கருத்து தெரிவிப்பது என் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது. வீரர்கள் ஒருவரையொருவர் மதிப்பதையும், நடுவர்களையும் அவர்களின் அதிகாரத்தையும் மதிப்பதையும், விளையாட்டை மதிப்பதையும் மட்டுமே நம்மால் கட்டுப்படுத்த முடியும்,” என்றார்.

தொடர்ந்து பேசிய ஸ்டீவர்ட், “கைக்குலுக்கல் தொடர்பாக மேலிடத்திலிருந்து ஏதேனும் அறிவுறுத்தல்கள் இருந்தால், அது எம்.சி.சி-யின் கட்டுப்பாட்டில் இல்லை. நாங்கள் அதை ஆராய விரும்புகிறோம். ஆனால் எங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சில பெரிய பிரச்சினைகள் இங்கு உள்ளன என்பதை நாங்கள் அறிவோம்.” என்று தெரிவித்தார்.

கடந்த 2025 ஆசியக் கோப்பை முதல் இந்திய அணி, பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்குவதில்லை என்ற கொள்கையைப் பின்பற்றி வருகிறது.

உலக ஐஎல்டி20 லீக்கின் போது ஸ்டீவர்ட் இந்தக் கருத்தைத் தெரிவித்தார். இந்தத் தொடரில் ‘கிரிக்கெட்டின் உணர்வைக்’ கொண்டாடுவதற்காக எம்.சி.சி, ஐஎல்டி20 லீக்குடன் இணைந்துள்ளது.

ALSO READ: இந்தியா ஏ – பாகிஸ்தான் ஏ: டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு

எம்.சி.சி. என்றால் என்ன.?

மேரிலேபோன் கிரிக்கெட் கழகம் 1787-ல் நிறுவப்பட்டது. இது கிரிக்கெட் சட்டங்களின் பாதுகாவலராகவும் பதிப்புரிமைதாரராகவும் செயல்படுகிறது. எம்.சி.சி. கிரிக்கெட்டின் 42 அசல் சட்டங்களைப் பாதுகாப்பதோடு, அவற்றை திருத்தும் அதிகாரத்தையும் கொண்டுள்ளது. எனவே, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கைகுலுக்கல் இல்லாத கொள்கை குறித்த அதன் அறிக்கை பெரும் முக்கியத்துவம் பெறுகிறது.

Follow Us