India A vs Pakistan A: இந்தியா – பாகிஸ்தான் மோதல்.. எகிறும் எதிர்பார்ப்பு.. போட்டி எப்போது?
Asia Cup Rising Stars 2026: ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் 2026 தொடரில் இந்தியா, பாகிஸ்தான் மோதல் நவம்பர் 22 அன்று தோஹாவில் பிற்பகல் 3:30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்தியா தனது முதல் போட்டியில் நேபாளத்தை வென்றது. பாகிஸ்தான் ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தியது. முந்தைய புள்ளிவிவரப்படி இந்தியாவுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம். போட்டி தேதி, நேரம், உத்தேச வீரர்கள் பட்டியல் உள்ளிட்ட முழு விவரங்களை தெரிந்து கொள்வோம்.
ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் 2026 தொடரில், நேபாளத்திற்கு எதிராக 306 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்தியா வலுவான தொடக்கத்தைப் பெற்றது. பாகிஸ்தானும் வெள்ளிக்கிழமை அன்று தனது முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்தநிலையில் அடுத்த போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் விளையாடவுள்ள நிலையில் இதுதொடர்பான முழு விவரங்களை தெரிந்து கொள்வோம்.
இந்தியா-பாகிஸ்தான் போட்டி எப்போது, எந்த நேரத்தில் தொடங்கும்?
இந்தியா-பாகிஸ்தான் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் போட்டி, நவம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை அன்று தோஹாவில் நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி பிற்பகல் 3:30 மணிக்கு போட்டி தொடங்கும், டாஸ் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும்.
யாருக்கு வெற்றி..?
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான முந்தைய போட்டிகளின் புள்ளிவிவரங்களையும், ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் 2026 தொடரில் வீரர்களின் ஒட்டுமொத்த சாதனைகளையும் பார்க்கும்போது, இந்தியா ‘ஏ’ அணிக்கு கணிசமான சாதகம் இருப்பது தெரிகிறது. இந்தியாவுக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும். சமீபத்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற அந்தப் போட்டியில், 100-வது ஓவரின் கடைசிப் பந்தில் இந்தியா ஒரு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த மோதல் இன்னும் சில நாட்களில் மீண்டும் நடைபெற உள்ளது.
இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்
வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் சர்மா, ஆயுஷ் படோனி, திலக் வர்மா (கேப்டன்), குமார் குஷாக்ரா (விக்கெட் கீப்பர்), ரின்கு சிங், சூர்யன்ஷ் ஷெட்ஜ், ஷாபாஸ் அகமது, விப்ராஜ் நிகம், ஹர்ஷித் ராணா, பிரின்ஸ் யாதவ்.
பாகிஸ்தான் அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்
ஷமில் ஹுசைன், மாஸ் சதாகத், ரோஹில் நசீர் (விக்கெட் கீப்பர்), ஹசன் நவாஸ், அப்துல் சமத் (கேப்டன்), ஃபர்ஹான் யூசுப், சாத் மசூத், முகமது இம்ரான், அகமது டேனியல். சுஃப்யான் மோகிம், அலி ராசா.
இந்திய ஏ அணியின் முழு அணி:
அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி, பிரப்சிம்ரன் சிங், திலக் வர்மா (கேப்டன்), ஆயுஷ் படோனி, ரின்கு சிங், குமார் குஷாக்ரா (விக்கெட் கீப்பர்), ஷாபாஸ் அகமது, சூர்யான்ஷ் ஷெட்ஜ், விப்ராஜ் நிகம், ஹர்ஷித் ராணா, அர்ஷத் கான், பிரின்ஸ் யாதவ்
பாகிஸ்தான் ஏ அணியின் முழு அணி:
ஷாஜாய்ப் கான், ஹைதர் அலி, அப்துல் சமத் (கேப்டன்), ஹசன் நவாஸ், மாஸ் சதாகத், டேனிஷ் அஜீஸ், முகமது இம்ரான் ரந்தவா, ரோஹல் நசீர் (விக்கெட் கீப்பர்), முகமது ஹஸ்னைன், சுஃப்யான் முகிம், அஹமட் டானியல், ஷாஹார்ஸ், மாஸ் ரஸான், ஷாஹார்ஸ், மாஸ் ரஸான். யூசுப்.