AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மின்வாரிய ஊழியர்களுக்கு குட்நியூஸ்.. பணிக்கொடை ரூ.25 லட்சமாக உயர்வு – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

Tamil Nadu Electricity Board Gratuity Hike : மின்வாரிய ஊழியர்களுக்கு ஓய்வூதிய பணிக்கொடை உச்சவரம்பை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தி வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கொடை உச்ச வரம்பு பழைய ஓய்வூதிய திட்டத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்வாரிய ஊழியர்களுக்கு குட்நியூஸ்.. பணிக்கொடை ரூ.25 லட்சமாக உயர்வு –  தமிழக அரசு அதிரடி அறிவிப்பு
தமிழக மின்வாரிய துறை.
Karthikeyan S
Karthikeyan S | Published: 21 Nov 2026 14:57 PM IST

சென்னை, நவம்பர் 21 : மின்வாரிய ஊழியர்களுக்கு ஓய்வூதிய பணிக்கொடை உச்சவரம்பை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தி வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு (Tamil Nadu Government) ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கொடை உச்ச வரம்பு பழைய ஓய்வூதிய திட்டத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் பொருந்தும் எனவும் ஜனவரி 1, 2024 அன்று முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு வித்தியாசத் தொகை வழங்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மின்வாரிய ஊழியர்களுக்கு ஓய்வூதியப் பணிக்கொடை உயர்வு

இது தொடர்பாக வெளியான அறிவிப்பில், தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்களுக்கு ஓய்வூதியப் பணிக்கொடை ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் (TNPDCL) அறிவித்துள்ளது. இதன் மூலம் ஓய்வூதிய, இறப்புக்கான பணிக்கொடை ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ள தகுதியான ஊழியர்களுக்கு மட்டுமே அறிவிப்புபொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் படி ஜனவரி 01, 2024 முதல் நவம்பர் 20, 2026 வரை ஓய்வு பெற்ற, இறந்த தகுதியான ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் தகுதியுள்ள மின் வாரிய ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கூடுதலாக ரூ.5 லட்சம் வரை பணிக்கொடை பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசின் நிதித்துறை கடந்த 2024 செப்டம்பர் 6ஆம் தேதி வெளியிட்ட அரசாணை எண் 281-ன்படி, அரசு ஊழியர்களுக்கான பணிக்கொடை உச்சவரம்பு ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டது.

இதையும் படிக்க : ஏற்காடு குப்பனூர் மலைப்பாதையில் 300 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து – ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்

இதே சலுகையை மின் வாரிய ஊழியர்களுக்கும் வழங்கக் கோரி, மின் பகிர்மானக் கழகம் கடந்த 2025 நவம்பர் 21ஆம் தேதி அரசுக்கு கடிதம் அனுப்பியது. இந்தக் கோரிக்கையை ஏற்று, நிதித்துறையின் ஒப்புதலுடன் தற்போது அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான உத்தரவை எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர் அனில் மேஷ்ராம், வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக மின்வாரியம் வெளியிட்ட அறிவிப்பு

 

இது தொடர்பாக வெளியான அறிவிப்பில் ஓய்வு பெறும் தமிழக அரசு பணியாளர்களுக்கான பணிக்கொடை 20 லட்சம் ரூபாயில் இருந்து 25 லட்சம் ரூபாயாக ஜனவரி 1 2024 முதல் உயர்த்தி வழங்கப்படுகிறது. இதேபோல் மின்வாரிய பணியாளர்களும் அரசாணை வெளியிட்ட தேதியிலிருந்து தங்களுக்கும் பணிக்கொடையை உயர்த்தி வழங்கும்படி கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று எரிசக்தி துறை, மின் வாரியத்தின், பழைய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள பணியாளர்களுக்கான பணிக்கொடையை, 25 லட்சம் ரூபாயாக உயர்த்தி உள்ளது.

இதையும் படிக்க : கடலூரில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு.. மத்திய மருத்துவக் குழுவினர் நேரில் ஆய்வு; தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்!

இந்த உயர்வு 2024 ஜனவரி 1ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு அமல்படுத்தப்படுகிறது. இதன்படி, அந்தத் தேதிக்குப் பிறகு ஓய்வு பெற்றவர்கள் மற்றும் பணிக்காலத்தில் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் இந்தப் பலன் பொருந்தும். இருப்பினும், பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வரும் தகுதியுள்ள ஊழியர்களுக்கு மட்டுமே இந்தச் சலுகை வழங்கப்படும் என அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இந்த அறிவிப்பால்ல் மின் வாரிய ஊழியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிவிப்பில் ஓய்வு பெறும் தமிழக அரசு பணியாளர்களுக்கான பணிக்கொடை 20 லட்சம் ரூபாயில் இருந்து 25 லட்சம் ரூபாயாக ஜனவரி 1 2024 முதல் உயர்த்தி வழங்கப்படுகிறது. இதேபோல் மின்வாரிய பணியாளர்களும் அரசாணை வெளியிட்ட தேதியிலிருந்து தங்களுக்கும் பணிக்கொடையை உயர்த்தி வழங்கும்படி கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று எரிசக்தி துறை, மின் வாரியத்தின், பழைய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள பணியாளர்களுக்கான பணிக்கொடையை, 25 லட்சம் ரூபாயாக உயர்த்தி உள்ளது.

Follow Us