தவெக ஆட்சியில்.. மக்கள் உயிருக்கும் விவசாயிகள் பயிருக்கும் பாதுகாப்பில்லை.. டி.ஆர்.பி. ராஜா நேரடி தாக்கு!
TRB Rajaa Allegation TVK Rule : தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் பொது மக்களின் உயிருக்கும், விவசாயிகளின் பயிருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை நிலவுவதாக முன்னாள் தொழில் துறை அமைச்சர் டி. ஆர். பி. ராஜா தெரிவித்துள்ளார். முழு விவரத்தை பார்க்கலாம்.
தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் பொதுமக்களின் உயிருக்கும், விவசாயிகளின் பயிருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி உள்ளதாக திமுகவின் முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி. ஆர். பி. ராஜா குற்றஞ்சாட்டி உள்ளார். இது தொடர்பாக, அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:
தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் விளைந்த பயிரை கருகாமல் காப்பாற்ற தண்ணீரை விலைக்கு வாங்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதைவிட ஒரு டெல்டா விவசாயிக்கு வேறு எந்தவிதமான கொடுமை இருக்க முடியும். காவிரி ஆற்றில் 11 டிஎம்சி பற்றாக்குறை நீரை பெறுவதற்கு சரியான வாதங்களை எடுத்து வைக்க திறன் இல்லாத தமிழக வெற்றிக் கழக அரசின் 2 மனுக்களும் உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள் தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் நிலை
மேட்டூர் அணையிலும் தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பருவமழையும் சரியாக பெய்யாத காரணத்தால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதைப் பற்றி தமிழக வெற்றிக் கழக அரசுக்கு கொஞ்சம் கூட அக்கறை இல்லாமல் உள்ளது. இதனால், டெல்டாவில் சம்பா பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் காசு கொடுத்து தண்ணீர் வாங்கி பயிர்களுக்கு பாய்ச்சும் நிலை உள்ளது. இந்த நிலைக்கு விவசாயிகளை தவெக அரசு தள்ளி உள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதல் அமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு. க. ஸ்டாலின் வலியுறுத்திபடி,
மேலும் படிக்க: தேனியில் தவெகவினர் செய்த செயல்.. அணை மதகுக்கு பூட்டு போட்டு பூட்டிய அதிகாரிகள்.. என்ன காரணம்!
தண்ணீரும், பாதுகாப்பும் தான் அவசிய தேவை
அனைத்துக் கட்சி கூட்டத்தை உடனடியாக முதல்வர் ஜோசப் விஜய் கூட்ட வேண்டும். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியது போல, வறட்சி பாதிப்பை கணக்கிட்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு தேவை வெற்று வாக்குறுதிகள் கிடையாது. தண்ணீரும், வாழ்வாதார பாதுகாப்பும் தான் அவசிய தேவை என்று முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி. ஆர். பி. ராஜா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் போதிய மழைப்பொழிவு இல்லாத காரணத்தால் பல்வேறு இடங்களில் விவசாயம் பெருமளவு பாதிக்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசின் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி
இதனிடையே, கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கான காவிரி நீர் பங்கை அம் மாநில அரசு தர மறுத்து வருகிறது. இது தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் 2 முறை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் அடுத்தடுத்து தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால், காவிரி நீர் பங்கைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான், டிஆர்பி ராஜா தவெக அரசு மீது குற்றஞ்சாட்டை முன்வைத்துள்ளார்.
மேலும் படிக்க: திருப்பரங்குன்றம் விவகாரம்.. தவெக அரசின் அடுத்த சட்ட நவடிக்கை என்ன முதல்வரே? மு.க.ஸ்டாலின் கேள்வி!