AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தேனியில் தவெகவினர் செய்த செயல்.. அணை மதகுக்கு பூட்டு போட்டு பூட்டிய அதிகாரிகள்.. என்ன காரணம்!

Sothuparai Dam : தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள சோத்துப்பாறை அணையின் மதகுக்கு உதவி பொறியாளர் பூட்டு போட்டனர் . அதற்கான சாவிகளையும் அதிகாரிகள் கொண்டு சென்றனர். அண்மையில் அனுமதியின்றி தவெகவினர் மதகை திறந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது .

தேனியில் தவெகவினர் செய்த செயல்.. அணை மதகுக்கு பூட்டு போட்டு பூட்டிய அதிகாரிகள்.. என்ன காரணம்!
பூட்டு போடப்பட்ட சோத்துப்பாறை அணை மதகு.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 20 Nov 2026 18:16 PM IST

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு எந்தவித அனுமதியும் இன்றி தமிழக வெற்றி கழகத்தினர் தண்ணீர் திறந்து விட்ட சோத்துப்பாறை அணை மதகுக்கு அணையின் அதிகாரிகள் புதிய பூட்டு போட்டனர். பெரியகுளம் அருகே உள்ள சோத்து பாறையில் அணை அமைந்துள்ளது. இந்த அணையானது, தற்போது முழு கொள்ளளவை எட்டி உள்ள நிலையில், அணையில் இருந்து உபரி நீர் வெளியேறி வருகிறது. இந்த நிலையில், கடந்த நவம்பர் 17- ஆம் தேதி புதிய ஆயக்கட்டு விவசாய பாசனத்திற்காக தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் சோத்துப்பாறை அணையில் இருந்து சுமார் 1.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மதகை திறந்தனர்.

தவெகவினர் மீது காவல் நிலையத்தில் புகார்

இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நிலையில் வைரலாக பரவியது. இது பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், பொதுப் பணித் துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகளின் அனுமதி இல்லாமல், தாங்களாகவே சோத்துப்பாறை அணை மதகை திறந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தென்கரை காவல் நிலையத்தில் பொதுப் பணித் துறை அதிகாரிகள் புகார் அளித்திருந்தனர். இந்த விவகாரம் பேசும் பொருளானது.

மேலும் படிக்க: தவெக எம்எல்ஏ இறுதி ஊர்வலம்.. வி. எஸ். பாபு உடலை சுமந்து சென்ற முதல்வர் விஜய்!

சோத்துப்பாறை அணை மதகுக்கு புதிய பூட்டு

இந்த நிலையில், சோத்துப்பாறை அணை மதகின் பூட்டுக்கு 2 சாவிகள் இருந்தன. ஒரு சாவி நீர்வளத்துறை அதிகாரிகளிடமும், மற்றொரு சாவி ஆயக்கட்டு விவசாயிகளிடமும் இருந்தது. இந்த நிலையில், சோத்துப்பாறை அணை மதகு திறந்த விவகாரத்தை தொடர்ந்து, வரும் காலங்களில் இது போன்ற அனுமதி பெறாமல் அணை மதகு திறக்கப்படாமல் இருப்பதற்காக மதகில் உள்ள பழை பூட்டை மாற்றிவிட்டு, புதிய பூட்டை போட்டு சோத்துப்பாறை அணை உதவி பொறியாளர் மனோஜ் குமார் பூட்டினார். இந்த அணை மதகின் பூட்டுக்கான 2 சாவிகளையும் அவரை எடுத்துச் சென்றார்.

இரு சாவிகளையும் கொண்டு சென்ற அதிகாரிகள்

இந்த அனை மதகை தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சிலர் உரிய அனுமதி பெறாமல் திறந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அத்துடன், இது தொடர்பான வீடியோக்களை ரீல்ஸ் ஆக சமூக வலைதளங்களில் பதிவிட்டது பல்வேறு கண்டனங்களை பெற்றிருந்தது. இந்த நிலையில் தான், இதுபோன்ற அனுமதி பெறாத சம்பவங்கள் நிகழாத வகையில் அணையின் உதவி பொறியாளர் மனோஜ் குமார் இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரிகிறது.

மேலும் படிக்க: செஞ்சி சிறுமி வழக்கு! சிபிசிஐடி விசாரணை வளையத்தில் 10 பேர்.. குற்றவாளியை நெருங்கும் போலீசார்?

Follow Us