AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிறந்த குழந்தை முதல் 18 வயது வரை ஒரே சுகாதாரப் பதிவு!.. ‘நலம் 2.0’ திட்டத்திற்குத் டெண்டர் கோரிய அரசு!

TN NHM Invites Tender: பிறந்த குழந்தை முதல் 18 வயது வரையிலான குழந்தைகளின் அனைத்து உடல்நல விவரங்களையும் ஒரே கோப்பில் பராமரிக்க 'நலம் 2.0' திட்டத்திற்குத் தேசிய சுகாதார இயக்கத்தின் தமிழ்நாடு பிரிவு டெண்டர் கோரியுள்ளது. பிறவி குறைபாடுகளுக்கான தனிப் பதிவேடு, தொடர் கண்காணிப்பு மற்றும் தரவுப் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களுடன் இந்தத் தளம் உருவாக்கப்பட உள்ளது.

பிறந்த குழந்தை முதல் 18 வயது வரை ஒரே சுகாதாரப் பதிவு!.. ‘நலம் 2.0’ திட்டத்திற்குத் டெண்டர் கோரிய அரசு!
முதல்வர் விஜய்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 21 Nov 2026 13:28 PM IST

நவம்பர், 21: பிறந்த குழந்தை முதல் 18 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினரின் உடல்நல விவரங்களை ஒரே இடத்தில் பராமரித்துத் தொடர்ச்சியாகக் கண்காணிப்பதற்காக ‘நலம் 2.0’ திட்டத்திற்குத் தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கத்தின் (NHM) தமிழ்நாடு பிரிவு ஒப்பந்தப் புள்ளி கோரியுள்ளது. ஒரு குழந்தை பிறந்தது முதல் 18 வயது அடையும் வரை மேற்கொள்ளப்படும் பிறந்த குழந்தை பரிசோதனை, அங்கன்வாடிப் பருவம், பள்ளிப் பருவம் மற்றும் இளம்பருவம் வரையிலான அனைத்துப் பரிசோதனை விவரங்களும் இந்த ஒரே கோப்பில் இடம்பெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. மேல் சிகிச்சைக்கு அனுப்புதல், நோய் கண்டறிதல், சிகிச்சை, பயிற்சி மற்றும் தொடர் கண்காணிப்பு ஆகிய அனைத்து விவரங்களும் ஒரே தளத்தில் பதிவு செய்யப்பட்டு, பின்னர் 18 வயதுக்குப் பிறகு வயது வந்தோருக்கான சுகாதாரக் கோப்புடன் இணைத்து வாழ்நாள் முழுமைக்குமான பதிவாக மாற்றப்படும் வகையில் இந்த அமைப்பு வடிவமைக்கப்பட உள்ளது.

இதையும் படிக்க : முதலீடுகளை ஈர்ப்பதில் ஆரோக்கியமான போட்டி – ஆந்திராவுக்கு முதலீட்டு தகவல்கள் கசிந்ததாக குற்றச்சாட்டு – கைடன்ஸ் தமிழ்நாடு விளக்கம்

ஒருங்கிணைந்த தரவுகள் மற்றும் கண்காணிப்பு வசதிகள்:

இந்தத் திட்டத்தின் மூலம் கல்வித் துறையின் மாணவர் விவரங்கள் மற்றும் பிற பதிவுகளில் இருந்து அனைத்துக் குழந்தைகளையும் ஒரே பதிவேட்டில் கொண்டு வருவதுடன், பிறப்புப் பதிவு, ஆதார், மாற்றுத்திறனாளி அடையாள அட்டை மற்றும் சுகாதார அடையாள அட்டை ஆகியவற்றுடன் இணைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம், செவிலியர் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கும் தங்கள் பகுதியில் உள்ள பள்ளி, அங்கன்வாடிப் பட்டியல் மற்றும் பரிசோதனை நிலையை அறியும் வசதியும் உருவாக்கப்படுகிறது. மேலும், நடமாடும் மருத்துவக் குழுக்கள் மாதாந்திரத் திட்டம் தயாரிக்கவும், மாவட்ட அதிகாரிகள் குறிப்பிட்ட விவரங்களின் அடிப்படையில் கண்காணிக்கவும், பரிசோதனையில் நோய் கண்டறியப்பட்டால் குணமாகும் வரை தொடர் கண்காணிப்பில் வைக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சிறப்புப் பதிவேடுகள் மற்றும் செயலிகளின் ஒருங்கிணைப்பு

மாவட்ட ஆரம்பத் தலையீட்டு மைய மேலாண்மை மற்றும் மேல் சிகிச்சைக்கு அனுப்பப்படும் குழந்தைகளைப் பதிவு செய்து தொடர்ந்து கண்காணிப்பதுடன், ஏழு முக்கியப் பிறவி குறைபாடுகளுக்குத் தனிப் பதிவேடு மற்றும் மாற்றுத்திறன் மற்றும் வளர்ச்சி குறைபாடுள்ள குழந்தைகளுக்கான பயிற்சிப் பதிவேடு ஆகிய முக்கிய அம்சங்களும் இந்தத் தளத்தில் இடம்பெற உள்ளன. முன்னதாகச் சுகாதாரத் துறையில் செயல்பட்டு வந்த குழந்தை நலப் பரிசோதனைக் கைபேசிச் செயலி, மாவட்ட ஆரம்பத் தலையீட்டு மைய இணையதளம் மற்றும் கண்ணொளி காப்போம் திட்ட இணையதளம் ஆகியவற்றுடன் புதிய நலம் 2.0 தளமும் இணைத்து ஒருங்கிணைந்த அமைப்பாக மாற்றப்பட உள்ளது.

இதையும் படிக்க: ராணிப்பேட்டை பெண் கொலை வழக்கில் திடுக் திருப்பம்.. நகைக்காக பெற்ற தாயை மகளே கொன்றது அம்பலம்!!

தொழில்நுட்ப வசதிகள் மற்றும் தகவல் பாதுகாப்பு:

இந்தப் புதிய அமைப்பு கைபேசி மற்றும் இணையதள வடிவில் செயல்படுவதுடன், இணைய இணைப்பு இல்லாத நேரங்களிலும் இயங்கும் வகையில் உருவாக்கப்பட உள்ளது. தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் திரைகளும் குறுஞ்செய்திச் சீட்டுகளும் இடம்பெறும் வகையில் அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சேகரிக்கப்படும் அனைத்துத் தகவல்களும் தனிநபர் தகவல் பாதுகாப்புச் சட்டத்தின்படி பாதுகாக்கப்படும் என்றும், இதன் முழு மூல நிறல் மற்றும் ஆவணங்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசுக்கே சொந்தமாக இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow Us