AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அரசு வங்கிக் கணக்கில் ரூ.22 கோடி சைபர் மோசடி.. 3 மாநிலங்களுக்கு விரைந்த தனிப்படை போலீசார்!!

Money mule cryptocurrency: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையின் தனியார் வங்கிக் கணக்கிலிருந்து சுமார் ரூ.22 கோடி சைபர் மோசடி செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளைப் பிடிக்க 3 மாநிலங்களுக்குத் தனிப்படைகள் விரைந்துள்ளன. ஆயிரக்கணக்கான மணி மியூல் கணக்குகள் மற்றும் கிரிப்டோ கரன்சி மூலம் பணம் மாற்றப்பட்ட நிலையில், இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரசு வங்கிக் கணக்கில் ரூ.22 கோடி சைபர் மோசடி.. 3 மாநிலங்களுக்கு விரைந்த தனிப்படை போலீசார்!!
மாதிரிப் படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 21 Nov 2026 12:08 PM IST

நவம்பர், 21: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை தனியார் வங்கியில் பராமரித்து வந்த வங்கிக் கணக்கிலிருந்து சுமார் ரூ.22 கோடி சைபர் மோசடி கும்பலால் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகச் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், ஊரக வளர்ச்சித் துறையின் பணப் பரிவர்த்தனைத் தளத்தை ஒரு தனியார் நிறுவனம் உருவாக்கிப் பயன்படுத்தி வருவதும், அதன் மூலம் மூன்று மாவட்டங்களுக்கு நிதிப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. இந்தச் சூழலில், போலி மின்னஞ்சல் முகவரிகளைப் பயன்படுத்தி ஹேக்கிங் செய்த சைபர் மோசடி கும்பல் சுமார் ரூ.22 கோடி பணத்தைக் கொள்ளையடித்திருப்பது விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பாக முதலில் ஏழு நபர்களும், பின்னர் இரண்டு நபர்களும் என மொத்தம் ஒன்பது நபர்களைச் சைபர் கிரைம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க: ராணிப்பேட்டை பெண் கொலை வழக்கில் திடுக் திருப்பம்.. நகைக்காக பெற்ற தாயை மகளே கொன்றது அம்பலம்!!

மணி மியூல் கணக்குகள் மற்றும் கிரிப்டோ கரன்சி பரிமாற்றம்:

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, இந்த ரூ.22 கோடி பணப்பரிமாற்றத்தையும் சைபர் கிரைம் கும்பலின் தலைவன் ஆயிரக்கணக்கான ‘மணி மியூல்’ (Money Mule) வங்கிக் கணக்குகள் மூலமாக மேற்கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்தக் கணக்குகளைச் சேகரிக்கும் ஏஜென்ட் ஒருவர் இருப்பதாகவும், அவர் அந்தக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் பணத்தைக் கிரிப்டோ கரன்சியாக மாற்றி, அதன் பின்னர் கும்பலின் தலைவனுக்கு அனுப்புவதை வாடிக்கையாகக் கொண்டிருந்ததாகவும் காவல்துறை விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

கமிஷன் முறை மற்றும் 3 மாநிலங்களுக்கு தனிப்படை:

மணி மியூல் வங்கிக் கணக்குகளை வழங்கிய நபர்களுக்குக் கமிஷன் தொகையாகப் பணம் வழங்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. உதாரணமாக, ஒரு லட்சம் ரூபாய் வரவு வைக்கப்பட்டால் அதில் 10 சதவீதத் தொகை கணக்கு வழங்கியவர்களின் வங்கிக் கணக்கிற்கே செல்லும் வகையில் இந்த மோசடி வலையமைப்பு செயல்பட்டு வந்துள்ளது. பல்வேறு மாநிலங்களிலிருந்து பல மணி மியூல் கணக்குகள் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து, குற்றவாளிகளைப் பிடிக்க மூன்று வெவ்வேறு மாநிலங்களுக்கு மூன்று தனிப்படைகள் அனுப்பப்பட்டுள்ளன.

இதையும் படிக்க : முதலீடுகளை ஈர்ப்பதில் ஆரோக்கியமான போட்டி – ஆந்திராவுக்கு முதலீட்டு தகவல்கள் கசிந்ததாக குற்றச்சாட்டு – கைடன்ஸ் தமிழ்நாடு விளக்கம்

தலைமறைவானவர்களை தேடும் தீவிர நடவடிக்கை:

மோசடிப் பணம் எங்கெங்குச் சென்றது, மணி மியூல் கணக்குகளை வழங்கிய நபர்கள் யார் என்பது குறித்துத் தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட ஒன்பது நபர்களிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையிலும், மூன்று மாநிலங்களில் நடைபெறும் தேடுதல் வேட்டையின் மூலமும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மற்ற நபர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளைச் சைபர் கிரைம் போலீசார் துரிதப்படுத்தியுள்ளனர்.

Follow Us