வங்கி கடன் சுமையா?, வாய்ப்பா.. யார் யார் எப்படி பயன்படுத்துகின்றனர்.. ஒரு சின்ன வித்தியாசம் தான்!
Tax Exemption on Wedding Gifts in India | இந்திய திருமணங்களில் மணமக்களுக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் பணம் வழங்கப்படும். இந்த நிலையில், திருமணத்தின்போது மணமக்களுக்கு வழங்கப்படும் பரிசுகள் மற்றும் பணத்துக்கு வருமான வரி விதிக்கப்படுமா என்பது குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது.
பொதுமக்களுக்கு வங்கிகள் போட்டி போட்டுக்கொண்டு வங்கி கடன்களை வழங்கி வருகின்றன. ஆனால், பெரும்பாலான பொதுமக்களின் மனநிலை கடன் வாங்க கூடாது என்பதாக தான் உள்ளது. அதற்கு காரணம், கடன் வாங்கினால் சுமை அதிகமாகிவிடும். கடனை திருப்பி செலுத்த கடும் சிரமங்களை சந்திக்க வேண்டும் என்பதுதான். ஆனால், வங்கி கடன் குறித்து பணக்காரர்களின் மனநிலை முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது. அதாவது, பணக்காரர்கள் எந்தவித தயக்கமும் இல்லாமல் கடனை வாங்குகின்றனர். அதற்கு காரணம், கடனை வைத்து அவர்கள் செய்யும் முதலீடுகள் தான்.
கடனை வைத்து சாம்ராய்ஜயங்களை உருவாக்கும் பணக்காரர்கள்
சாமானிய மக்களை போல் பணக்காரர்கள் வங்கி கடனை கண்டு அச்சப்படுவதில்லை. அவர்கள் வங்கிகள் மூலம் கடன் பெற்று அந்த கடனை வைத்து முதலீடு செய்கின்றனர். உதாரணமாக, பெரிய நிறுவனங்கள் கடன் வாங்கி ஒரு கட்டத்தை வாங்குகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர்கள் அந்த கட்டத்தை வாடகைக்கு விட்டுவிட்டு அதில் இருந்து வரும் வருமானத்தை வைத்து தங்களது வங்கி கடனை திருப்பி செலுத்துவர். மீதமுள்ள பணத்தில் தங்களது சொந்த சாம்ராஜ்யங்களை சிறிது சிறிதாக கட்டமைப்பர். இவ்வாறு அவர்கள் தங்களது மொத்த சாம்ராஜ்யத்தையும் கடன் மூலமே கட்டமைக்கின்றனர்.
இதையும் படிங்க : வங்கி லாக்கரில் இருக்கும் தங்க நகைகள் காணாமல் போனால் என்ன ஆகும்?




கடன் Vs லாபம் : முதலீட்டாளர்கள், சாமானியர்களுக்கான வித்தியாசம்
கடன் வாங்குவதில் முதலீட்டாளர்கள் மற்றும் சாமானியர்களுக்கு பெரிய வித்தியாசம் உள்ளது. அதாவது சாமானியர்கள் வட்டியை நினைத்து கவலைப்படுவர். ஆனால், பணக்காரர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் கடன் வாங்கப்போகும் கடனில் இருந்து வரும் லாபத்தை பார்ப்பார்கள். இதுதான் சாமானியர்களுக்கு, முதலீட்டாளர்களுக்கும் இருக்கும் மிகப்பெரிய வித்தியாசமாக உள்ளது.
இதையும் படிங்க : 2027 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அறிமுகமாகும் MDR?.. வெளியான முக்கிய தகவல்!
கிரெடிட் ஸ்கோர் மிகவும் அவசியம் ஆகும்
வங்கியில் இருந்து குறைந்த வட்டி விகிதத்தில் ஒருவர் கடன் பெற வேண்டும் என்றால், அவரது கிரெடிட் ஸ்கோர் மிகவும் அவசியமான மற்றும் முக்கியமான ஒன்றாக உள்ளது. உதாரணமாக ஒருவரது கிரெடிட் ஸ்கோர் சிறப்பானதாக இருந்தால் வங்கிகள் அவர்களை பாதுகாப்பான வாடிக்கையாளர்களாக கருதும். இதன் காரணமாக அந்த வாடிக்கையாளர்களுக்கு ஆர்வமாக கடன் வழங்க முன்வரும் வங்கிகள் அவர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கும். ஒருவேளை கிரெடிட் ஸ்கோர் மோசமாக இருக்கும் பட்சத்தில் அதிக வட்டி கொண்ட கடனோ அல்லது கடனே கிடைக்காத சூழல் கூட உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.