இனி ஓய்வுக்கு பிறகும் வட்டி.. பிஎஃப் பணத்தை எடுக்கும் முறையில் முக்கிய மாற்றம்!
EPFO Considers SWP for Retirement Benefits | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் மூலம் பணியில் இருக்கும்போதும், ஓய்வு பெற்ற பிறகு ஊழியர்கள் பல்வேறு சிறப்பு பலன்களை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், ஊழியர்களுக்கு ஓய்வுக்கு பிறகு சிறப்பு பலன்களை வழங்கும் முக்கிய நடவடிக்கை எடுக்க இபிஎஃப்ஓ பரிசீலனை செய்து வருகிறது.
இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கான வரப்பிரசாதமான ஒரு அமைப்பாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் (EPFO – Employee Provident Fund Organization) உள்ளது. இந்த அமைச்சகத்தின் மூலம் ஏற்கனவே ஊழியர்கள் பல்வேறு பலன்களை பெற்று வருகின்றனர். இருப்பினும், ஊழியர்கள் மிக சுலபமாக சேவைகளை பெற இபிஎஃப்ஓ அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தான், தற்போது பிஃப் (PF – Provident Fund) பணத்தை எடுக்கும் முறையில் முக்கிய மாற்றத்தை மேற்கொண்டுள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பிஎஃப் பணத்தை எடுக்கும் முறையில் முக்கிய மாற்றம்
பிஎஃப் என்பது ஊழியர்களின் ஓய்வு காலத்தை நிதி பாதுகாப்பு மிக்கதாக மாற்றும் ஒரு அட்டகாசமான அம்சமாக உள்ளது. அதாவது, ஊழியர்கள் தங்களது பணி காலம் முழுவதும் வேலை செய்து, பிறகு அந்த பணத்தை ஓய்வில் எடுத்து பயன்படுத்துவது தான் இதன் சிறப்பு அம்சம் ஆகும். அதாவது, ஊழியர்கள் தங்களது பணி ஓய்வுக்கு பிறகு, தாங்கள் பணி காலம் முழுவதும் பங்களிப்பு செய்த மொத்த பணத்தையும் எடுத்துக்கொள்ள முடியும். இந்த முறையில் தான், சில முக்கிய மாற்றங்களை கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க : டிவிஎஸ் குழுமத்தில் தீவிரமடையும் சொத்து பிரச்னை – வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய மகள் – என்ன நடந்தது?




SWP முறையை பரிசீலிக்கும் இபிஎஃப்ஓ
பணி ஓய்வின் போது ஊழியர்கள் தங்களது பிஎஃப் பணத்தை மொத்தமாக எடுக்க அனுமதி உள்ள நிலையில், அதனை தவணை முறையில் எடுக்கும் SWP (Systematic Withdrawal Plan) முறையை அறிமுகம் செய்ய இபிஎஃப்ஓ பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நடைபெறும் இபிஎஃப்ஓவின் மத்திய அரங்காவலர் குழு கூட்டத்தில் இந்த முன்மொழிவு தொடர்பான விவாதம் மேற்கொள்ளப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : வேலைக்கு செல்லாமலே மாதம் ரூ.5,500 சம்பளம் பெறலாம்.. இந்த அஞ்சலக திட்டம் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்!
ஓய்வுக்கு பிறகும் பிஎஃப் பணத்துக்கு வட்டி கிடைக்கும்
இந்த புதிய SWP அம்சம் அமலுக்கு வரும் பட்சத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு பலன்கள் கிடைக்கும். குறிப்பாக ஓய்வு பெற்றவர்கள் தங்களது பிஎஃப் பணத்தை இருப்பு வைத்துக்கொள்ள முடியும். இதன் மூலம் அவர்களுக்கு தொடர்ந்து வட்டி கிடைத்துக்கொண்டே இருக்கும். இதன் காரணமாக ஊழியர்களால் ஓய்வுக்கு பிறகும் வருமானம் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.