AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பண்டிகைக்கு கிரெடிட் கார்டில் ஷாப்பிங் செய்கிறீர்களா?.. இந்த சிக்கல்கள் குறித்து கவனம் தேவை!

Festive Season Credit Card Use | பலரும் தங்களது பண தேவைகளுக்கு கிரெடிட் கார்டை பயன்படுத்துகின்றனர். இவ்வாறு மொத்த பணத்தையும் செலவு செய்துவிட்டு, அந்த கடனை குறைந்தபட்ச தொகை மூலம் திருப்பி செலுத்திக்கொள்ளலாம் என நினைத்தால் இந்த சிக்கல்கள் குறித்து கவனமாக இருக்க வேண்டும்.

பண்டிகைக்கு கிரெடிட் கார்டில் ஷாப்பிங் செய்கிறீர்களா?.. இந்த சிக்கல்கள் குறித்து கவனம் தேவை!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 17 Nov 2026 18:21 PM IST

இந்தியாவில் பண்டிகை கால தொடங்கியுள்ளது. இதன் காரணமாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கொண்டாட்டங்கள் கலைக்கட்ட தொடங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக தமிழக மக்கள் கிறிஸ்துமஸ், தீபாவளி பண்டிகையை கொண்டாட தயாராகி வருகின்றனர். பண்டிகை என்றாலே புத்தாடைகள் இல்லாமல் இருக்காது. இந்த நிலையில், பலரும் கடன் வாங்கியது புத்தாடை வாங்கி பண்டிகைகளை கொண்டாடுவர். அந்த வகையில், பலரும் கிரெடிட் கார்டு மூலம் ஷாப்பிங் (Credit Card Shopping) செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், பண்டிகை ஷாப்பிங் பிள்ளை திருப்பி செலுத்துவது தொடர்பான முக்கிய அம்சங்கள் குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாக உள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கிரெடிட் கார்டு பண்டிகை ஷாப்பிங்

தற்போதைய காலக்கட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் கிரெடிட் கார்டு பயன்பாடு அதிகரித்து காணப்படுகிறது. வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவது, ஆடைகள் எடுப்பது என பலரும் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளை தான் மேற்கொள்கின்றனர். இந்த நிலையில், தீபாவளிக்கு கிரெடிட் கார்டில் ஷாப்பிங் செய்துவிட்டு, குறைந்தபட்ச தொகையை மட்டும் திரும்ப செலுத்திவிடலாம் என நினைக்கின்றனர். அது மிகவும் சிக்கலான ஒன்றாகும்.

இதையும் படிங்க : ரேஷன் கார்டு பயனர்களுக்கு தீபாவளி சூப்பர் அப்டேட்.. என்ன தெரியுமா?

ஆபத்தில் சிக்க வைத்துவிடும் குறைந்தபட்ச தொகை

பலரும் கிரெடிட் கார்டில் செலவு செய்த பணத்தை திருப்பி செலுத்த முடியாமல் குறைந்தபட்ச தொகையை மட்டும் திருப்பி செலுத்துவர். ஆனால், அவ்வாறு செய்வது ஆபராத தொகையில் இருந்து மட்டுமே நிவாரணம் அளிக்கும். ஆனால், நீண்ட கால அடிப்படையில் பார்க்கும் பட்சத்தில் நீங்கள் குறைந்தபட்ச தொகையை செலுத்தலாம் என எடுக்கும் முடிவே உங்களை சிக்கலில் சிக்க வைத்துவிடும்.

இதையும் படிங்க : இனி 4 நாமினிகள் வரை நியமிக்கலாம்.. ஆர்பிஐ எடுத்த முக்கிய முடிவு!

மிக கடுமையான வட்டி சுமை ஏற்படும்

கிரெடிட் கார்டில் செலவு செய்த பணத்தை முழுவதுமாக திருப்பி செலுத்தாமல் குறைந்தபட்ச தொகையை மட்டும் திருப்பி செலுத்துவதில் ஒரு சிக்கல் உள்ளது. அதாவது மீதமுள்ள தொகைக்கு ஆண்டுக்கு 36 சதவீதம் முதல் 45 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படும். இது மிகவும் அதிகமான வட்டியாகும்.

பலரும் பணத்தை செலவு செய்துவிட்டு, குறைந்தபட்ச தொகையை கொஞ்சம் கொஞமாக மாத தவணையாக செலுத்திவிடலாம் என நினைக்கின்றனர். உண்மையில், கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்து குறைந்தபட்ச மாத தவணை மட்டும் செலுத்துவது மேலும் சிக்கலை ஏற்படுத்திவிடும். எனவே அது குறித்து கவனமாக செயல்பட வேண்டும்.

Follow Us