AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வாரத்தின் முதல் நாளே மீண்டும் சரிந்தது தங்கம் விலை.. சவரன் ரூ.1 லட்சமாக குறைந்தது..

Gold and Silver Price In Chennai Today: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.600 குறைந்துள்ளது. இதன் மூலம் ஒரு கிராம் தங்கம் ரூ.12,540-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.1,00,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருவது நகை வாங்குவோரிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

வாரத்தின் முதல் நாளே மீண்டும் சரிந்தது தங்கம் விலை.. சவரன் ரூ.1 லட்சமாக குறைந்தது..
மாதிரிப் படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 16 Nov 2026 11:17 AM IST

சென்னை, நவ.16: சர்வதேச பொருளாதார நிலவரங்கள் மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு மாற்றங்களுக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த சில மாதங்களாக உச்சத்தைத் தொட்டு வந்த தங்கம் விலை, தற்போது சற்றுப் பின்னோக்கி நகர்ந்து வருவது நகைப்பிரியர்களுக்கும் பொதுமக்களுக்கும் மிகப்பெரிய நிம்மதியை அளித்துள்ளது. அந்த வகையில், சென்னை மார்க்கெட்டில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மீண்டும் அதிரடியாகக் குறைந்துள்ளது. வாரத்தின் தொடக்க நாளான இன்று தங்கம் விலை சரிவைக் கண்டுள்ளது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிராம் மற்றும் சவரன் விலை விவரங்கள்:

அந்தவையில், சென்னையில் இன்றைய நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 குறைந்துள்ளது. இதன் காரணமாக, நேற்று வரை விற்பனையான விலையில் இருந்து ரூ.75 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.12,540க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று, ஒரு சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கம் ரூ.600 குறைந்து ரூ.1,00,320க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை மெல்லக் குறைந்து சரியாக ரூ.1,00,320 என்ற நிலைக்கு வந்து நின்றது நகை வாங்குவோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Follow Us