AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிக்பாஸில் கேப்டனான தன்யா… திட்டமிட்டு கடுப்பேற்றும் ஜேசன் – வைரலாகும் வீடியோ

Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் தொடங்கியதில் இருந்து தொடர்ந்து 10 வாரங்கள் முடிவடைந்து தற்போது 11-வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் இன்று 71-வது நாளிற்கான முதல் புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

பிக்பாஸில் கேப்டனான தன்யா… திட்டமிட்டு கடுப்பேற்றும் ஜேசன் – வைரலாகும் வீடியோ
பிக்பாஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 16 Nov 2026 10:34 AM IST

தமிழ் சின்னத்திரையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 (Bigg Boss Tamil Season 10) நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் மாதம் 2026-ம் ஆண்டு தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் நிலையில் தொடர்ந்து 10 வாரங்கள் முடிவடைந்து தற்போது 11-வது வாரத்தை எட்டியுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் பல ட்விஸ்ட்கள் நிறைந்து உள்ளது. அந்த வகையில் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் கடந்த 9-வது வாரம் தீபாவளியன்று யாருமே எதிர்பாராத விதமாக டபுள் எவிக்‌ஷன் நடைப்பெற்றது. அதனைத் தொடர்ந்து கடந்த 10-வது வாரம் மொத்தம் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் 13 போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி நடைப்பெற்று வந்தது. ஒவ்வொரு வாரமும் இவர் எப்படி உள்ளே இருக்கிறார் மற்ற போட்டியாளர்கள் வெளியேறுகிறார்கள் என்று எண்ணம் தோன்றியது முத்தழகிக்குதான்.

முத்தழகி இந்த நிகழ்ச்சியில் எந்தவிதான விசங்களையும் செய்யாமல் தொடர்ந்து வீட்டில் இருந்து வந்த நிலையில் அவர் நேற்று விஜய் சேதுபதி எபிசோடில் எவிக்டாகி வெளியேறினார். அதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பதைப் போல அவினாஷ் எவிக்டாகி வெளியேறினார். இந்த நிகழ்வு பார்வையாளர்களுக்கே சர்ப்ரைஸாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸில் கேப்டனான தன்யா… திட்டமிட்டு கடுப்பேற்றும் ஜேசன்:

இந்த நிலையில் இந்த 11-வது வாரம் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி மொத்தம் 11 போட்டியாளர்களுடன் தொடங்கி உள்ளது. அதன்படி இன்று 71-வது நாளிற்கான முதல் புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அதில் இந்த வாரம் பிக்பாஸில் கேப்டனாக தன்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் மற்ற நபர்கள் கேப்டனாக இருந்த போது ரூல்ஸ் எதையும் மதிக்கவில்லை என்று இந்த வாரம் அவரது கேப்டன்ஸில் வீட்டில் உள்ள அனைவரும் அவரிடம் வம்பு இழுக்க முடிவு செய்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக கடந்த 10-வது வார கேப்டனாக இருந்த ஜேசன் தன்யா தலைவர் என்று அறிவித்த உடனே ரூல்ஸ் ப்ரேக் செய்து காட்டுகிறார். வேண்டும் என்றே தன்யாவை வெறுப்பேற்றும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Also Read… பிக்பாஸில் இருந்து இந்த வாரம் வீட்டைவிட்டு வெளியேறப்போவது அந்த நடிகையா? வைரலாகும் தகவல்

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… நடிகர் கௌதம் ராம் கார்த்திக்கின் புதுப் பட டைட்டில் இதுதான்… வெளியானது அப்டேட்

Follow Us