AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“காரோடு சேர்த்து 12 வயது சிறுமியை கடத்திச் சென்ற மர்ம நபர்கள்!”.. நள்ளிரவில் அரங்கேறிய பயங்கரம்!

Guduvanchery car kidnapping 12 year old girl: சென்னை அடுத்த கூடுவாஞ்சேரி பகுதியில் நள்ளிரவில் பெற்றோர் உணவு வாங்கச் சென்றபோது, காரில் தூங்கிக்கொண்டிருந்த 12 வயது சிறுமியைக் காருடன் சேர்த்து மர்ம நபர்கள் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீஸார் தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

“காரோடு சேர்த்து 12 வயது சிறுமியை கடத்திச் சென்ற மர்ம நபர்கள்!”.. நள்ளிரவில் அரங்கேறிய பயங்கரம்!
கிளாம்பாக்கம் காவல் நிலையம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 16 Nov 2026 09:24 AM IST

சென்னை, நவ.16: சென்னை மாநகரப் பகுதிகளில் அதிகரித்து வரும் குற்றச் செயல்கள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், சென்னை அடுத்த கூடுவாஞ்சேரி பகுதியில் நள்ளிரவு நேரத்தில் அரங்கேறியுள்ள ஒரு சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. சிவகங்கை மாவட்டம் கமுதியைச் சேர்ந்த மலையரசன் என்பவர் பொத்தேரி பகுதியில் கிளவுடு கிச்சன்  நடத்தி வருகிறார். சொந்த ஊருக்குச் சென்றுவிட்டுத் தனது குடும்பத்துடன் நள்ளிரவு 12 மணி அளவில் சென்னைக்குத் திரும்பிய அவர், கூடுவாஞ்சேரி பகுதியில் உள்ள ஒரு கடைக்கு உணவு அருந்தச் சென்றுள்ளார். அப்போது தனது காரில் 12 வயது மகளான ரிஷிகாவை அமர வைத்துவிட்டுச் சென்ற நிலையில், யாரும் எதிர்பாராத நேரத்தில் அந்தக் காரையும் சிறுமியையும் மர்ம நபர்கள் கடத்திச் சென்றுள்ளனர்.

இதையும் படிக்க: “இளைஞரை போக்சோ வழக்கில் சிக்க வைக்க ரூ.5 லட்சம் லஞ்சம்!”.. பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்.. பின்னணியில் பகீர் சதி!

கார் மற்றும் சிறுமி மாயமானதால் பதறிய பெற்றோர்:

உணவு வாங்குவதற்காகக் கடையின் அருகில் சென்றுவிட்டுச் சில நிமிடங்களில் திரும்பி வந்த பெற்றோர், தாங்கள் நிறுத்திச் சென்ற கார் மற்றும் அதனுள் இருந்த தங்களது 12 வயது மகள் இருவரும் மாயமாகியிருப்பதைக் கண்டு கடும் அதிர்ச்சியும் பேரதிர்ச்சியும் அடைந்தனர். நள்ளிரவு நேரத்தில் கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இச்சம்பவம் குறித்து அவர்கள் உடனடியாகக் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பெற்றோர் அளித்த புகாரின் தீவிரத்தைக் கருத்தில் கொண்ட காவல் துறையினர், உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இது கார் திருடும் நோக்கில் நடந்த கைவரிசையா அல்லது சிறுமியை இலக்காகக் கொண்ட நேரடிக் கடத்தலா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தேடுதல்:

சம்பவம் குறித்துத் தகவல் அறிந்தவுடன் உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் இரவோடு இரவாக பல தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தேடுதல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கூடுவாஞ்சேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி (CCTV) கண்காணிப்பு கேமராக்களைக் காவல் துறையினர் ஆய்வு செய்ததில், நள்ளிரவில் அப்பகுதியில் சுற்றிய மர்ம நபர்களின் நடமாட்டம் பதிவாகியுள்ளது. குறிப்பாக, சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகள் (Toll Plazas) மற்றும் செக்போஸ்ட்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை மையமாகக் கொண்டு காட்டியுள்ள வாகனத்தைத் தேடும் பணியில் போலீசார் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிக்க: “சென்னை நட்சத்திர விடுதியில் அதிர்ச்சி!”.. இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தவெக நிர்வாகிகள் கைது!

பொதுமக்களிடையே எழுந்துள்ள அச்சம்:

நள்ளிரவு நேரத்தில் சிறுமி ஒருவர் காருடன் கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் வெளியே செல்லும்போது அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை இச்சம்பவம் உணர்த்தியுள்ளது. கடத்தப்பட்ட சிறுமியை மீட்கவும், குற்றவாளிகளைக் கைது செய்யவும் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் பல்வேறு மாவட்டங்களுக்குத் தகவல்களைப் பகிர்ந்து தீவிர தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர். விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us