AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“சென்னை நட்சத்திர விடுதியில் அதிர்ச்சி!”.. இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தவெக நிர்வாகிகள் கைது!

TVK functionaries arrested Chennai Koyambedu: சென்னை கோயம்பேடு நூறடி சாலையில் உள்ள நட்சத்திர விடுதி பார்க்கிங்கில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகிகள் இருவரை அரும்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர்.

“சென்னை நட்சத்திர விடுதியில் அதிர்ச்சி!”.. இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தவெக நிர்வாகிகள் கைது!
கைதான தவெக நிர்வாகிகள்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 16 Nov 2026 07:26 AM IST

சென்னை, நவ.16: சென்னை மாநகரப் பகுதியில் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைப் புகார்கள் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில், சென்னை கோயம்பேடு பகுதியில் அமைந்துள்ள பிரபல நட்சத்திர விடுதி ஒன்றின் வாகன நிறுத்துமிடத்தில் இளம் பெண் ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்பேடு நூறடி சாலையில் அமைந்துள்ள இந்த விடுதியில் கடந்த நவம்பர் 9-ஆம் தேதி இரவு நேரத்தில் நடந்த இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் சார்பில் அரும்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : மாணவர்களைச் சந்திக்கும் முதல்வர் விஜய் – தவெகவின் 2-ஆம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா!

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தவெக நிர்வாகிகள் கைது:

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை அரும்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தீவிரமாக ஆய்வு செய்தனர். விசாரணையில் கிடைத்த ஆதாரங்களின்படி, இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட அரும்பாக்கத்தைச் சேர்ந்த பாலாஜி மற்றும் பிரபுகுமார் ஆகிய இருவரைப் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், கைது செய்யப்பட்டுள்ள பாலாஜி என்பவர் தமிழக வெற்றிக் கழகத்தின் மத்திய சென்னை இளைஞர் அணி நிர்வாகியாகவும், பிரபுகுமார் என்பவர் அண்ணாநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும் செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது. அரசியல் கட்சியைச் சேர்ந்த முக்கியப் பொறுப்பாளர்கள் இதுபோன்ற பாலியல் குற்றத்தில் ஈடுபட்டுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பெண் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு:

கைது செய்யப்பட்ட தவெக நிர்வாகிகள் இருவர் மீதும் பெண் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனிடையே, கடந்த 9-ஆம் தேதி அன்று புகார் அளிக்கப்பட்ட போதிலும், உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாமல் ஒரு வார கால தாமதத்திற்குப் பின்னரே கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தொடர் அழுத்தங்கள் மற்றும் கோரிக்கைகளுக்குப் பிறகே போலீசார் விழிப்படைந்து தற்போது இருவரையும் கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிக்க: ‘விசாரணை நடத்தட்டும்…’ – கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மீதான புகார் குறித்து தேசிய மகளிர் ஆணையம் – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

காவல்துறையின் தொடர் விசாரணையும் எதிர்பார்ப்பும்:

அரசியல் பிரமுகர்கள் மற்றும் கட்சிகளின் பெயர்களைப் பயன்படுத்தி இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது எந்தவிதச் சமரசமும் இன்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள தவெக நிர்வாகிகள் இருவரிடமும் போலீசார் தீவிரமான விசாரணையை மேற்கொண்டு வருவதோடு, இச்சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் ஆழமான ஆய்வுகளை நடத்தி வருகின்றனர்.

Follow Us