Silambarasan: சிம்புவின் அரசன் பட ஷூட்டிங் நிலவரம் என்ன? இன்னும் முடியாததற்கு காரணம் இதுவா?
Arasan Movie Shooting Update: தமிழில் மக்கள் மத்தியில் அதிகமாக வரவேற்கப்படும் நடிகராக இருந்துவருபவர் சிலம்பரசன். இவரின் நடிப்பில் தமிழில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் திரைப்படம் அரசன். இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கி ஒரு ஆண்டை நெருங்கும் நிலையில், இன்னும் நிறைவடையாததற்கு காரணம் என்ன என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.
நடிகர் சிலம்பரசன் (Silambarasan) நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து புது புது திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இறுதியாக இவரின் நடிப்பில் ரிலீஸான திரைப்படம் தக் லைஃப் (Thug Life). கடந்த 2025ம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகிய இந்த திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இப்படத்திற்கு பிறகு ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிலம்பரசன் இணைவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், சில காரணங்களால் அந்த திரைப்படமானது முழுவதுமாக கைவிடப்பட்டிருந்தது. இதனால் உடனடியாக இயக்குநர் வெற்றிமாறன் (Director Vetri Maaran) இயக்கத்தில், அரசன் திரைப்படத்தில் (Arasan Movie) சிம்பு இணைந்திருந்தார். இந்த படத்தின் ஷூட்டிங் 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்திலே தொடங்கிய நிலையில், மிக பிரம்மாண்டமாக நடைபெற்றுவந்தது.
இன்னும் இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடையவில்லை. அந்த விதத்தில் இப்படத்தின் ஷூட்டிங் நடக்கிறது என்ற தகவலும் இல்லை என கூறலாம். இந்நிலையில் இதன் படப்பிடிப்பு நிலை என்ன என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.




இதையும் படிங்க: திரையரங்கில் வெளியாவதற்கு முன்பே சாதனைப் படைத்த அறிவு திரைப்படம் – கொண்டாட்டத்தில் படக்குழு
சிலம்பரசனின் அரசன் படத்தின் ஷூட்டிங் நிலவரம்:
நடிகர் சிம்புவின் அரசன் படத்தின் ஷூட்டிங் தற்போதைக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. வெற்றிமாறன், ராஜன் வகையறா படத்தின் ஷூட்டிங்கில் சீரியஸாக இருப்பதாக கூறப்படுகிறது. படக்குழுவினர் முதலில் ராஜன் வகையறா படத்தை முடித்து, அரசன் படத்திற்கு முன்பாக அதனை திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இதுவே வெற்றிமாறன் மற்றும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணுவின் தற்போதைய பிளான் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: இதெல்லாம் ஒரு Role- ஆ? ஓ.எம் படத்தில் நடித்தது குறித்து மம்முட்டி பகிர்ந்த சம்பவம்!
அரசன் திரைப்படத்தின் சுமார் 40 முதல் 45 நாட்கள் ஷூட்டிங் இன்னும் மீதமுள்ள நிலையில், படக்குழுவினர் 2026-ஆம் ஆண்டின் மீதமுள்ள காலத்தை இப்படத்தை முடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ராஜன் வகையறா தற்போது 2027-ஆம் ஆண்டு கோடைக்காலத்தில் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. ராஜன் வகையறா படத்தின் ஷூட்டிங் முடிந்த பிறகு அரசன் ஷூட்டிங்கானது தொடங்கும் என்று கூறப்படுகிறது இது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை.
அரசன் திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ குறித்து கலைப்புலி எஸ் தாணு வெளியாகிய எக்ஸ் பதிவு:
They call the KING “DAAS”! 👑
📢Glimpse into ARASAN’s world soon!
Happy Diwali! 🪔 Let the Fireu works continue💥
▶️ https://t.co/gQZpwKSnhH#VetriMaaran @SilambarasanTR_ @VijaySethuOffl @anirudhofficial
@priyankaamohan @GTelefilms @imManishShah #Yogalakshmi @iYogiBabu @VelrajR #Jacki @RIAZtheboss #fireufireufireu— Kalaippuli S Thanu (@theVcreations) November 8, 2026
சிலம்பரசனின் அரசன் திரைப்படத்தின் ஷூட்டிங் இன்னும் மீதமுள்ளது. இதில் வட சென்னை படத்தில் நடித்திருந்த பல்வேறு நட்சத்திர நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படமும் வட சென்னை படத்தின் டைம் லைனில் நடக்கும் கதையை வைத்து உருவாக்கப்பட்டுவரும் நிலையில், நிச்சயம் மக்கள் மத்தியில் வரவேற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.